/ வாழ்க்கை வரலாறு / வீரத் திருமகன் தீரன் சின்னமலை

₹ 100

தமிழ்நாட்டு விடுதலை வேள்வியில் முதன்மை பெற்ற வீரர்களில் ஒருவரான தீரன் சின்னமலை பற்றி எழுதப்பட்டுள்ள நுால்.வீரத்திருமகனின் வரலாற்றை இலக்கியம், சமூகவியல், பண்பாட்டுடன் கலந்து அழகுற வடித்துள்ளது. இளம் வயதில் சின்னமலையாகிய தீர்த்தகிரி கற்ற கல்வி, அவன் புலவர்களைப் போற்றிய பாங்கு, ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்த வீரம் என கடந்து வந்த கரடு முரடான பாதைகளை விளக்கும் வகையில் வரலாறாக்கியுள்ளார். வரலாற்றோடு கொங்கு மண்டலப் பழஞ்சிறப்பும், தமிழ்ப் பண்பாடும் கலந்து அளிக்கிறது. செந்தமிழ் நாட்டு இளைஞர்களின் சொந்த வரலாறு என்று, சின்னமலையை நெருங்கிய உறவாக்கிக் காட்டியுள்ள நுால்.– முனைவர் இரா.பன்னிருகை வடிவேலன்


முக்கிய வீடியோ