/ தமிழ்மொழி / வெண்பாக் கடல்
வெண்பாக் கடல்
தமிழில் முதன்மையாக உள்ள வெண்பா விபரம், கவிதை யாப்புக்கு ஏற்ற வடிவங்களை அறிமுகம் செய்யும் நுால். வெண்பா இலக்கணம் உதாரணப் பாடல்களுடன் விளக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி, மகளிர், மாந்த நேயம் உட்பட எட்டு வகை பாக்கள் உள்ளன. நேரிசை, இன்னிசை, குறள், சிந்தியல், அளவடி, குளகம், சவலை, மடக்கு, அம்மானை என வெண்பாவில் 22 வகைகள் விளக்கப்பட்டுள்ளன. இலக்கண மரபே தெரியாதோரும் கவி பாடும் வகையில் வழிகாட்டப்பட்டுள்ளது. மோனை, எதுகையுடன் விதவிதமாக வெண்பா பாடுவதற்கு தக்க வழிகாட்டுகிறது. அவையடக்கத்துடன் ‘ஐக்கூ’ என்ற புதுப்பாவை மரபு வழியுடன் விளக்கி அசத்துகிறது. வெண்பா கடலில் நீந்துவதற்கு கற்பிக்கும் யாப்பிலக்கண நுால். – முனைவர் மா.கி.ரமணன்