/ கதைகள் / வெந்து தணிந்தது வீடு
வெந்து தணிந்தது வீடு
பார்த்த, கேட்ட, வாசித்த சம்பவங்கள் அடிப்படையில் படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணியின் போது இறந்தோருக்காக நியாயம் கேட்டு போராடும் பரசுராம்; அதே நேரத்தில் திரைப்படத்திற்கு டிக்கெட் எடுத்து காத்திருக்கும் காதலி யுவதி. சூழலை எப்படி கையாண்டு, இறுதியில் இணைந்தனரா என்பதை, ‘தோழரின் தோழி’ கதை, உணர்வுப்பூர்வமாக விவரிக்கிறது. மின்சாரம் இல்லாத வீட்டில் நன்கு படித்த மாணவன், சைக்கிள் நிறுவனத்தில் பணி புரிந்து முதல் மாத ஊதியத்துடன், மின்சாரம் உள்ள வீட்டில் குடியேறுவதை, ‘தேரடி’ கதை தத்ரூபமாக பகிர்கிறது. எழுத்தாளர்கள் மன ஓட்டத்தை, ‘இலக்கிய விபத்து’ கதை, சிந்தனைக்கு தருகிறது. வெவ்வேறு களங்களை மையப்படுத்தியுள்ள கதை நுால். – டி.எஸ்.ராயன்




