/ கதைகள் / வேதாளம்

₹ 200

உலக அளவில் பிரபலமான எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு நுால். அரசன் மகளுக்கு அவையில் பணி புரியும் ஊழியர் மீது ஏற்பட்ட காதலை கையாண்டதை, ‘வேங்கையா, மங்கையா’ கதை கூறுகிறது. மகிழ்ச்சி செய்தி என்றாலும், அதிர்ச்சியானால் மரணம் நிகழும் என, ‘அதிர்ச்சியான விஷயங்கள்’ கதை எச்சரிக்கிறது. மரண படுக்கையில் இருப்போரை சமூகம் எப்படி பார்க்கும் என்பதை, ‘பிசாசு’ கதை விவரித்து திகிலுாட்டுகிறது. சாதுர்யமாக செயல்படும் குற்றவாளி குறித்த, ‘தொழில் ரகசியம்’ கதை பிரமிப்பூட்டுகிறது. காட்சி பூர்வமாக அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். – டி.எஸ்.ராயன்


சமீபத்திய செய்தி