/ கவிதைகள் / வெற்றி மந்திரங்கள்
வெற்றி மந்திரங்கள்
தன்னம்பிக்கை, தளராத முயற்சியை முன் மொழியும் கவிதைகளின் தொகுப்பு நுால். தோல்வியில் இருந்து வெற்றிக்கு செல்லவும், சோர்வு, சோம்பல், சோகத்தை விரட்டவும், குறை களைந்து நிறை பெறவும், லட்சியத்தால் சாதித்து சரித்திரம் படைக்கவும் வழிகாட்டுகின்றன. ‘விழித்தால் தான் விழிக்கு அழகு, சிந்தனை அறிவுக் கண்ணைத் திறக்கும், ரசனை இல்லாத வாழ்க்கை பாலைவனம் போன்ற வரிகள் வைரமாய் ஜொலிக்கின்றன. ஆப்ரகாம் லிங்கன், பில்கேட்ஸ், ஓபராய், டெண்டுல்கர் போன்ற பிரபலங்களின் வெற்றி ஒப்பிடப்பட்டுள்ளன. ‘மாற்றம் உள்ளவன் முன்னேற்றம் பெறுகிறான், மாறாதவன் முடங்கிப் போகிறான்’ என அறிவுரைக்கிறது. இன்றைய கனவு நாளைய நிஜம் போன்ற வாசகங்கள் நிறைந்த சுயமுன்னேற்ற நுால். – முனைவர் மா.கி.ரமணன்




