/ சுய முன்னேற்றம் / வெற்றி மேல் வெற்றி!
வெற்றி மேல் வெற்றி!
சுய முன்னேற்றம் பற்றி விவரிக்கும் நுால். வெற்றியை தேடும் அனைவருக்கும் பயன்படும். தன்னம்பிக்கை தொடர்பான தொடர் முயற்சியை ஊக்குவிக்கும் விதமான கருத்துகள் அமைந்துள்ளன. வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை உண்டாக்குகிறது. கடும் உழைப்பின் வழியாக வெற்றி அடைந்த பலரின் வாழ்க்கை பாடங்களை காட்டுகிறது. முயற்சியே முதற்படி, நம்மால் முடியும், அர்ப்பணிப்பு மனப்பான்மை, முழு ஈடுபாடு மனித மனம், திறவுகோல், மனதில் உறுதி வேண்டும், வயது ஒரு தடையல்ல, அமைதியாக சாதனை புரிவோம் போன்ற தலைப்புகளில் தன்னம்பிக்கை வளர்த்து, வெற்றிக்கு வழி காட்டுகிறது. மாணவ – மாணவியர் வெற்றி பெற வழிகாட்டும் வகையில் உறுதியான கருத்துகளை உடைய நுால். – பேராசிரியர் ரா.நாராயணன்




