/ சுய முன்னேற்றம் / வெற்றியின் ரகசியம்
வெற்றியின் ரகசியம்
இயலாமையை விலக்கி, வெற்றி நோக்கி முனைப்புடன் செயல்பட வழிகாட்டும் நுால். மனது ஏற்காத கெட்ட எண்ணங்கள் மேலோங்கும் போது, அதில் இருந்து விடுபடும் வழிகளை சொல்கிறது. பலவீனம் ஏற்படும்போது, பலத்தை வைத்து வெல்லும் நுட்பத்தை கூறுகிறது. முயற்சி தோல்வியடையும்போது துவண்டு விடாமல், மீண்டும் முயற்சிக்கும் வழிமுறைகளை பகிர்கிறது. முயலாமையால் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைக்கிறது. கல்வியில் முயற்சி செய்ய துாண்டி, வெற்றியை நோக்கி பயணிக்க வைக்கிறது. சோம்பலை தவிர்க்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்கிறது. போதை தோல்விக்கு வழிகாட்டும் என எச்சரிக்கிறது. ஊக்கம் தரும் நட்புகளை அடையாளம் கண்டு பழக கூறுகிறது. சுவாரசியத்துடன் நம்பிக்கை தரும் நுால். – டி.எஸ்.ராயன்




