விஜய பாரதம் (இரண்டு மலர்கள்) தீபாவளி மலர் 2019
இதில் முதல் மலரில் சிவ பெருமானுக்கு அன்னை உணவு வழங்கிய காட்சி அமைந்திருக்கிறது. ராஷ்டிரீய ஸ்வயம் சேவக் சங்கம் மற்றும் சங்கபரிவார் கருத்துக்களை தேசிய வார இதழாக தாங்கி வரும் விஜயபாரதம் இத்தடவை தனது இரண்டாவது மலரை ‘தமிழர் பெட்டகமாக’ உருவாக்கிஇருக்கிறது. கங்கை கொண்வ சோழீச்வரத்தில் கடாரம் கொண்ட இராஜேந்திர சோழன் எழுப்பிய கோவிலின் ராஜ கோபுரத்தில் மாலவனுக்கு ஆழி ஈந்த சிவபெருமான் செயலை விளக்கும் சிற்பம் அதன் பெருமையை விளக்கும் குடவாயில் பாலசுப்ரமணியம் கட்டுரை வரலாற்றுப் பின்னணி கொண்டது. கம்பனின் பார்வையில் நம்மாழ்வார், இலஞ்சித் தலத்து குமரன் ‘ஞானம் தரும் வள்ளல்’ என்ற கருத்துக்கள், இந்திய பாக்., எல்லையில் உள்ள தனுாத் மாதா கோவில், தியாகராஜ கீர்த்தனைகளில் நல்லொழுக்க பண்புகள் என்ற பல தகவல்கள் இந்த நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்து உள்ளன. உள்ளூர் தெருக்கூத்திலும் அறிவின் வெளிப்பாடே என்னும் கட்டுரை. தமிழ்நாடு சைவம் வைதிக சமயமே என்ற தில்லை கார்த்திகேயன் சிறப்புக் கட்டுரை ஆகியவை உள்ளன. தமிழ் நாடகங்களில் தேசபக்தி என்பது உட்பட பல தேசியம் சார்ந்த கருத்துக் கட்டுரைகளும், தேசிய கருத்துக்களை பிரதிபலிக்கும் மலராக காட்டுகிறது.