/ புத்தக மதிப்புரை / விஜயநகரப் பேரரசின் எழுச்சியும் வீழ்ச்சியும்
விஜயநகரப் பேரரசின் எழுச்சியும் வீழ்ச்சியும்
விஜயநகரப் பேரரசின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி வரலாற்றை ஆராய்ந்துள்ள நுால். ஹம்பியின் பெருமை, சீரழிவு, ஆட்சி செய்த அரசர்கள், போர்கள், பேரரசின் எல்லைகள் பற்றி விரிவாக விளக்குகிறது. கிருஷ்ண தேவராயர் உருவாக்கிய கோவில்கள், கட்டுமானங்கள் பற்றி அறிய தருகிறது. சென்னை வரலாற்று குறிப்புகளையும் தருகிறது. கிருஷ்ண தேவராயரின் கீழ் அமைந்த சிற்றரசுகள், பாளையக்காரர்கள், நிர்வாக முறைகள் பற்றியும் அறிய செய்கிறது. சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம் பற்றிய புரிதலை தருகிறது. விஜயநகர வேந்தர்கள் பட்டியல், கால வரிசைப்படி தரப்பட்டுள்ளது. ஆய்வு நோக்கிலான வரலாற்று நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




