/ பொது / விகடன் இயர் புக் 2022
விகடன் இயர் புக் 2022
போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில், கடந்த ஆண்டு நிகழ்வுகளின் தொகுப்பாக அமைந்துள்ள நுால். எளிய நடையில், முக்கிய நிகழ்வுகள், படங்களுடன் பதிவாகியுள்ளன. உலகம், இந்தியா, தமிழ்நாடு என தகவல்கள் பகுக்கப்பட்டு, உரிய வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. கால வாரியாக நிகழ்களை அறிய ஏதுவாக உள்ளது. அறிஞர்களின் கருத்தாழமிக்க கட்டுரைகளும் இடம் பெற்று உள்ளன. தகவல்கள் உரிய புள்ளி விபரங்களுடன், எளிதில் புரியும் வண்ணம் தொகுக்கப்பட்டு உள்ளது. உரிய படங்கள் கவரும் வண்ணம் பிரசுரமாகி உள்ளன. முக்கிய நிகழ்வுகள் எல்லாம், வண்ணப்படங்களுடன் உள்ளன. குடிமைப்பணி மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பொது அறிவு கேள்விகளை எதிர்கொள்ளும் வகையில், வினா – விடை பாணியிலும் கட்டுரைகள் உள்ளன. போட்டித் தேர்வு எழுதுவோருக்கு உகந்த தகவல் களஞ்சியம்.– மலர்