/ கதைகள் / விலங்குகளின் வில்லங்கக் கதைகள்
விலங்குகளின் வில்லங்கக் கதைகள்
விலங்குகளை கதாபாத்திரங்களாக கொண்டு படைக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு கதையிலும் ஒரு விலங்கு வருகிறது. அது மனிதனுக்கு எத்தகைய படிப்பினை தருகிறது என, எடுத்து சொல்லப்பட்டுள்ளது. வேடன் வைக்கும் பொறியை புத்திசாலி காகம் உணர்ந்து, ஆபத்து என்பதை சுட்டிக்காட்டுகிறது, ‘காகத்தின் எச்சரிக்கை’ கதை. காரணமில்லாமல் தற்செயலாய் வந்தவனோடு சிநேகம் கொள்தல் தக்கதன்று, முகத்துக்கு முன் இனிமையாக பேசுபவன், மறைவாய் இருக்கும் போது கெடுதி செய்பவனை தவிர்க்க வேண்டும் என, முத்தாய்ப்பாயான கருத்துகள் மனதில் நிற்கின்றன. பெரியவர்களும் படிக்க உகந்த சிறுவர்களுக்கான கதைகளின் தொகுப்பு நுால். – ஊஞ்சல் பிரபு




