/ ஆன்மிகம் / விநாயகருக்கும் அறுபடை வீடுகள்
விநாயகருக்கும் அறுபடை வீடுகள்
விநாயகரின் அறுபடை வீடுகள் பற்றி எடுத்துரைக்கும் நுால். முருகனுக்கு தம்பியாக வட மாநிலங்களில் கருதப்படுகிறார் விநாயகர். அவரது பெண் உருவம் விநாயகி பெயரில் வழிபடப்படுகிறது. விநாயகரின் முதல் படை வீடு திருவண்ணாமலை என்பதை அறிய தருகிறது. தேவர்களுக்கு அமுத கலசம் கிடைத்தது பற்றி விவரிக்கிறது. பிள்ளையார்பட்டி விநாயகர் சிறப்பு விரிவாக சொல்லப்பட்டுள்ளது. விநாயகரின் 32 திருவுருவங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள விநாயகர் கோவில் பற்றி விபரம் தருகிறது. விநாயகர், மயிலை வாகனமாக்கியுள்ள கோவில் பற்றியும் உள்ளது. விநாயகருக்கான ஆறு படை வீடுகள் பற்றிய செய்திகளை தாங்கியுள்ள ஆன்மிக நுால். – டாக்டர் கார்முகிலோன்




