/ கவிதைகள் / விரிந்த சிறகுகள்

₹ 360

தேர்தல், ஓட்டுரிமை, பசிப்பிணி, உழவர் என, சமுதாயத்தை பற்றி எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். இளம் பெண்களின் உடை நாகரிகத்தில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுகிறது. அன்னை மீனாட்சியின் தாயுள்ளத்தை, ‘கேட்பது கொடுப்பவள் தாயல்லள், உனக்கு ஏற்றது கொடுப்பவள் தாயன்றோ’ என அசாதாரண ஆன்மிக உண்மையை விளக்குகிறது. அது போல், ‘மருந்தை எடுத்துக் கொடுப்பது ஒன்றே மருத்துவனென்றன் வேலையடா, பொருந்திச் சரியாய் போவது எல்லாம் படைத்தாளே அவள் லீலையடா’ என தொழிலை முன்வைத்து இறை மகத்துவத்தை காட்டுகிறது. பணிவின் அவசியத்தை உணர்த்துகிறது. காதல் உணர்வை போற்றி ஞான விளக்கேற்றும் நுால்.-– தி.க‌.நேத்ரா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை