/ ஆன்மிகம் / விசேஷம் இது வித்தியாசம் (பாகம் 01)

₹ 180

சனாதன தர்ம கோட்பாடுள்ள கோவில்களை தேர்ந்தெடுத்து தகவல்களை தரும் நுால். தீப வடிவத்தில் அம்மன், வாலறுந்த ஆஞ்சநேயர், பாகற்காய் மாலை அணியும் சுவாமி, கருவறையில் நிஜ காளை, கன்னிகளுக்கு மாங்கல்யம் அணிவிக்கும் சடங்கு, அம்பாளுக்கு சாக்லேட், டிரைவர் கோவில், தசாவதார ஒட்டியாணம், திருவிழாவே நடக்காத கோவில் என பல வகையாக உள்ளன. நாத்தனார் அம்மன், மாமியார்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சிவன், புராண காலத்தில் முதல் சிசேரியன் சிகிச்சை, புத்திசாலிகளுக்கான புத்தாண்டு... இப்படி தலைப்புகளிலே வித்தியாசத்தை தருகின்றன. இவை பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. கோவில்களை தரிசிக்க வழிகாட்டியாக விளங்கும் நுால். -– இளங்கோவன்


புதிய வீடியோ