/ வாழ்க்கை வரலாறு / விசில்
விசில்
ரயில்வே பணியில் சந்தித்த இன்னல்களை வெளிப்படுத்தும் சுயசரிதை நுால். பள்ளி படிப்பு முதல் ரயில்வே ஊழியராக பணி செய்தது வரை, கடந்து வந்த கடினப் பாதையை தொகுத்து எளிய நடையில் கதை போல் அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் நடந்த பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழலை வெளிச்சத்திற்கு எப்படி கொண்டு வந்தார் என்பது சுவாரசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எண்களை புத்தக அத்தியாயத்தில் தலைப்புகளாக கூறியிருப்பது புதுமையாக உள்ளது. சமூகத்தில் நிலவும் அடிப்படை சிக்கல்களை வெளிப்படுத்துகிறது. மனித மனதின் உணர்வுகளையும் நேர்த்தியாக வெளிப்படுத்துகிறது. கதையின் போக்கில் சிந்திக்கத் துாண்டும் கேள்விகளை முன்வைக்கிறது. வாசித்து முடித்த பிறகும் எண்ணத்தில் ஓங்கி ஒலித்து தாக்கம் ஏற்படுத்தும் நுால். – ராம்




