வ.உ.சி. பற்றி ம.பொ.சி
பதிவு எண்: 482/2010.4/344 ஏ, சீ ஷெல் அவென்யூ, அண்ணாசாலை, பாலவாக்கம், சென்னை - 600 041 (பக்கம்: 97) வ.உ.சி யை என் அரசியல் தந்தை என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி பெருமைபடக் கூறுவார். அவர் எத்தனையோ நூல்களை எழுதியிருந்தாலும், முதன் முதலில் எழுதி வெளியிட்ட நூல், கப்பலோட்டிய தமிழர் என்பது தான். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, அதற்காக இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற முதல் தமிழர் வ.உ.சி., தான். அவர் சிறை சென்ற தியாகி மட்டுமல்ல. வெறும் தேசபக்தர் மட்டுமல்ல, இந்தியாவிலேயே அரசியல் கலப்புடைய வேலை நிறுத்தத்தை தூத்துக்குடி ஹார்விமில் தொழிலாளர்களைக் கொண்டு நடத்தி வைத்த தொழிற்சங்கவாதி.தமிழ்ப்புலவர், கவிஞர் இப்படி வ.உ.சி.,யின் பன்முகச் சிறப்பை உலகறியச் செய்தவர் சிலம்புச் செல்வர். இந்நூலில் அவர் அரசு விழாக்களிலும், பொது விழாக்களிலும் பேசிய பேச்சுக்கள், அவர் நடத்திவந்த, "செங்கோல் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகள். இவை யாவற்றையும் தொகுத்துத் தந்திருக்கிறார் ம.பொ.சி. தமிழர்கள் அனைவரும் குறிப்பாக, இளம் அரசியல்வாதிகள் (எல்லா கட்சிகளிலும் உள்ள) படிக்க வேண்டிய நூல்.