/ கட்டுரைகள் / ஆறிலிருந்து அறுபது வரை வாழும் வழிகள்!
ஆறிலிருந்து அறுபது வரை வாழும் வழிகள்!
குழந்தை வளர்ப்பு முதல் அடுத்தடுத்த வயதில் முடிவுகள் எடுக்க ஆலோசனை கூறும் நுால். குழந்தைக்கு வழிகாட்டுதல், ஊக்குவித்தல், பாதுகாப்பு அவசியம் என்கிறது. கல்வியுடன் கதை, கவிதை படிக்க ஊக்குவிக்க வலியுறுத்துகிறது. சத்தான உணவு, சீரான துாக்கம் மற்றும் விளையாட்டை ஊக்குவிக்கிறது. வீட்டு வேலையில் உதவிகள், படைப்பாற்றலில் கவனம் செலுத்த வலியுறுத்துகிறது. உடற்பயிற்சி, சுய கட்டுப்பாடு, சமூக வட்டங்களை உருவாக்குவது, பொருளாதார பொறுப்பு போன்ற குணங்கள் பற்றி கூறுகிறது. சுற்றுலா அவசியம் என்கிறது. பொழுதை ஆக்கப்பூர்வமான, மகிழ்ச்சிக்கான செயல்களில் ஈடுபடுவதுடன், உடலில் கவனம் செலுத்த ஆலோசனை சொல்லும் நுால். – டி.எஸ்.ராயன்




