/ கதைகள் / வில்லியம் பாக்னர்

₹ 200

உலக எழுத்தாளரின் தேர்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் எட்டு கதைகள் உள்ளன. கருப்பின மக்களின் மனதை கவர்ந்த எமிலி, மேயரான தந்தை கர்னலின் வரி விலக்கு, பெண்களுக்கு விதித்த மேலாடை கட்டளையை எப்படி கையாண்டார் என்பதை விவரிக்கிறது. இறக்கும் நிலையில் எமிலியிக்கு பணிவிடை செய்த கருப்பினத்தவர் பேச முடியாமல் இருந்ததையும், இறப்புக்கான காரணத்தையும் விவரிக்கிறது, ‘எமிலிக்காக ஒரு ரோஜா’ கதை. விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ராணுவ வீரராகும் விருப்பத்தை, ‘வீரத்திருமகன்கள்’ கதை போராட்ட உணர்வுடன் கூறுகிறது. காவல் புலனாய்வில் கிடைக்கும் தடயங்களால் ஏற்படும் விளைவுகளை, ‘உயர்ந்த மனிதர்கள்’ கதை விறுவிறுப்புடன் நகர்த்துகிறது. ஒடுக்கப்பட்டோரின் குரலாக உள்ள நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை