/ கட்டுரைகள் / கலைமகள் அருள் பெற்ற கதாசிரியர்கள்
கலைமகள் அருள் பெற்ற கதாசிரியர்கள்
மேடை நாடகம், சினிமா, வானொலியில் சிறப்பான படைப்புகளை தமிழில் உருவாக்கி புகழ் பெற்ற கதாசிரியர்களை அறிமுகம் செய்யும் நுால். சங்கரதாஸ் சுவாமிகள் துவங்கி, இப்போது மேடை நாடகம் எழுதுவோர் குறித்தும் தகவல்கள் தரப்பட்டுள்ளன. தமிழில் பிரமாண்டமான படைப்புகளை எழுதிய, 73 பேரின் வாழ்க்கை குறிப்பு இடம் பெற்றுள்ளது. கதாசிரியர்களின் குடும்ப பின்னணி, அயராத உழைப்பால் மலர்ந்த படைப்புகள், அவை வெற்றி வாகை சூடிய விதம் என சுவையான தகவல்கள் தரப்பட்டுள்ளன. நாடக உலகில் இருந்து சினிமா வழியாக வளர்ந்து புகழ்பெற்றோரின் படைப்பின் சிறப்புகள் குறித்த அறிமுக தகவல்கள் உள்ளன. கலை வாழ்வின் முக்கிய புகைப்படங்கள், பழங்கால சினிமா விளம்பர செய்திகளுடன் அமைந்துள்ள நுால். – ஒளி




