/ கட்டுரைகள் / யார் வைத்த தீ?

₹ 250

இலங்கை உள்நாட்டு போரில் கொல்லப்பட்ட அப்பாவி குழந்தை ஆன்மாக்கள் நீதி கேட்பது போல் அமைந்த நாடக நுால். ஒரு தீவு இரு நாடுகள், புத்தம் சரணம் கச்சாமி, வீதிகளில் ஓடி இருக்க வேண்டிய தேர் உள்ளிட்ட, 10 தலைப்புகளில் உருவாக்கப்பட்டுள்ளது. போரில் படுகொலையான குழந்தைகள் கடவுளிடம் நீதி கேட்பது போல் அமைந்துள்ளது. செய்த தவறை ஒப்புக் கொள்ளும் ஒரு நபரை அழைத்து வந்தால், இறந்தோரை உயிர்த்தெழ செய்வதாக உறுதியளிக்கிறார் கடவுள். ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அமைப்புகளிடம் நீதி கேட்கின்றனர் குழந்தைகள். ஒவ்வொருவரும் தங்களிடம் தவறில்லை என அடுத்தவர் மீது பழி போட்டு தப்புவதாக அமைந்துள்ளது. இலங்கை உள்நாட்டு போர் பற்றிய தகவல்கள் உள்ளன. படிக்க வேண்டிய நுால். – வி.ராமலிங்கம்


முக்கிய வீடியோ