/ கவிதைகள் / வருகைப் பதிவேட்டில் உன் பெயரில்லை

₹ 125

மனித உறவுகளின் வெளிப்பாட்டை கவிதை மொழியில் கூறும் நுால். மனம் மாயக்கண்ணாடி அணிந்து அமைதியை தேடி அலைவதை கூறுகிறது. போரில் குழந்தைகள் ஈவிரக்கம் இல்லாமல் கொல்லப்படுவதை சாடுகிறது. கடல் கடந்து காண முடியாத தொலைவில் இருந்தாலும், உண்மையான நேசம் நேசிக்க வைக்கும். வெறுமையான மனதுக்கு, பொறுமையான வாசிப்பும், நேசிப்பும் தேவை என கூறுகிறது. வளர்ந்த பின், புது பிறப்பெடுத்தால் இழந்ததை மீண்டும் நேசிக்க முடியும் என்கிறது. காதலியின் நினைவுகளை மழைச்சாரலாக நினைவூட்டுகிறது. சர்க்கஸ் கூடாரத்தில் உள்ள வலி, பதற்றம், மகிழ்ச்சி, ஆரவாரத்தை உயிருடன் ஒப்பிட்டு பேசுகிறது. அவமதித்தவர்களை தேடும் மனதிற்குள் இருக்கும் ஏக்கத்தை சொல்லும் நுால். – டி.எஸ்.ராயன்


சமீபத்திய செய்தி