/ பயண கட்டுரை / யுவான் சுவாங்

₹ 160

சீனாவில் பிறந்து, புத்த மதத்தைத் தழுவி, ஞானத்தை இன்னும் ஆழமாகக் கற்றுத் தெளிய வேண்டுமென்ற ஆவலோடு, 20 ஆயிரம் மைல்களை இரண்டு ஆண்டுகளில் பயணித்து, இந்தியாவில், 15 ஆண்டுகள் தங்கி, நாடு திரும்பி, ‘சியூக்கி’ என்னும் தலைப்பில் பயண நூலை எழுதினார். புத்தரின் பிறப்பிடமான லும்பினியிலிருந்து, ஞானம் பெற்ற கயா வரை உள்ள அனைத்துப் புனிதத் தலங்களையும் தரிசித்தவர். 7ம் நூற்றாண்டில் இந்தியாவின் நிலையைப் படம் பிடித்துக் காட்டியவர்.கோபி பாலைவனத்தில் தான் முதன் முதலாக டைனோசர் முட்டை கண்டுபிடிக்கப்பட்டது (பக். 33), நாளந்தா பல்கலைக்கழகம் உலகிலேயே முதன் முதலாகக் கட்டப்பட்ட பல்கலைக்கழகம் (பக். 71) போன்ற தகவல்களைக் கொண்ட இந்நூலை சுவாரஸ்யமாக படிக்கும் வகையில் மிக நல்ல நடையில் நூலாசிரியர் எழுதியுள்ளார். காஞ்சிபுரத்தின் சிறப்பை யுவான் சுவாங் எழுதியுள்ளது, இன்றைய நிலையில் வியப்பான செய்தி.யுவான் சுவாங் பற்றி அறிந்து கொள்ள நல்லதொரு வரலாற்று ரீதியான புனிதப் பயண நூல் இது.– பின்னலூரான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை