Advertisement

கோல்!

₹ 105

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளியாக இருக்கலாம்; உயர் பொறுப்பில் இருக்கும் நிர்வாகியாக இருக்கலாம்; தொழிலாளியாகவும் இருக்கலாம். இந்தக் கதையில் வரும் பாத்திரங்களில் நிச்சயம் யாராவது ஒருவரில் உங்களைக் காண்பீர்கள். உங்கள் பணியிடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; எந்தத் துறையாகவும் இருக்கலாம். ஆனால், இந்தக் கதைக்களமான தொழிற்சாலையின் பிரச்னைகளும் நிகழ்வுகளும் நிச்சயம் உங்கள் பணியிடத்திலும் எதிர்ப்படக் கூடியவைதான்.ஒரு தொழிற்சாலையில் புதிதாக அதிகாரியாகப் பதவியேற்ற ஒருவர், நலிந்து கிடக்கும் அதன் இக்கட்டான சூழலிலிருந்து, அந்த நிறுவனத்தை எப்படி மீட்டெடுக்கிறார்... மீண்டும் லாபம் ஈட்டித்தரும் தொழிற்சாலையாக அதை எப்படி மாற்றுகிறார்... இந்த மீட்புப் போராட்டத்தில் தொழிற்சாலைப் பணிகளிலேயே தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் அந்த அதிகாரி, தன் மனைவியுடன் இரவு உணவு வேளைகளில்கூட கலந்துகொள்ள முடியாத அளவுக்கு பணிச்சுமை அவரை எப்படி வாட்டியெடுக்கிறது... அதனால் மனைவியைப் பிரிந்து வாடும் அவர், எத்தகைய மனத் துயரங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது... இந்தச் சூழலில் இருந்துகொண்டு ஆலையை அவர் எப்படி நிர்வகிக்கிறார்... மனைவியுடன் எப்படி இணைகிறார்... தொழிற்சாலைக்கு ஈட்டிக்கொடுத்த லாபம் எப்படி அந்த அதிகாரியை உயர் பதவிக்கு இட்டுச் செல்கிறது... என்பதையெல்லாம் தன்னுடைய எளிய தமிழாக்கத்தில் அஞ்சனா தேவ் படம்பிடித்துக் காட்டுகிறார்.இது ஆனந்த விகடன் இதழில் தொடராக வந்தபோது வாசகர்கள் இருகரம் நீட்டி வரவேற்றனர். இதில் இடம்பெறும் தொழிற்சாலைகள் தொடர்பான மிக நுணுக்கமான விவரங்களையும், நிர்வாகக் கலைகளையும்கூட ஆர்வத்தோடு படித்து உள்வாங்கிக் கொண்டார்கள். இந்த நூல், அந்தக் கதையை ஒரே மூச்சில் படிக்கும் வாய்ப்பைத் தருகிறது.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்