பேரா.சூர்யநாராயணன் தெற்கு மற்றும் தெற்காசிய நாடுகளைப் பற்றிய சிறந்த ஒரு ஆய்வாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தில், தெற்கு மற்றும் தெற்காசிய ஆய்வு மையத்தின் இயக்குனராகவும், முதுநிலைப் படிப்பில் பேராசியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முக்கியமாக பாக் நீரிணையின் வரலாற்றைச் சிறந்த முறையில் ஆய்ந்தவர். இவ்விரு முதல் நூல்களிலும் கச்சத்தீவு பிரச்னையை அதன் ஆரம்ப காலத்திலிருந்து திறம்பட விவரித்துள்ளார். காலத்தால் முதல் நூல் முன்னரே எழுதப்பட்டதாயினும் இன்றைய நிலைக்கும் அது சரியாக இருப்பதால் இம்மூன்று நூல்களையும் கலந்து பார்ப்பதே பொருத்தமாகும். முதல் நூலிலேயே ஆசிரியரின் நோக்கு தெளிவாகிறது. ஆரம்ப காலத்திலிருந்தே, பாக் நீரிணை, இந்தியாவிற்கும் – இலங்கைக்கும் இடையிலேயான ஒரு வழியாகவும், அதே நேரத்தில் ஒரு பெரும் தடையாகவும் இருந்துள்ளது. அவ்விடம் மீன் பிடிப்பதற்கான ஒரு முக்கியமான இடமென்பது கீழ்க்கண்ட புள்ளி விபரங்களால் தெரியும். 1980ம் ஆண்டு மக்கள் தொகை விபரத்தின் படி, தமிழ்நாட்டு மீனவர், 3,95,903 ஆவர். இந்தியாவின் மொத்த மீனவர் தொகையில் தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பங்காவர்.உலகில் மீனவர் சமுதாயம் வாழும் எவ்விடத்தை நோக்கினும் ஒன்று தெளிவாகும்; அதாவது சாதாரணமாக, மீனவர்கள், கடலை தமது வாழ்க்கையின் ஒருபகுதியாகவே கருதுகின்றனர். ஆகையால் அவர்களுக்குக் கடல் எல்லைகள் ஒரு பொருட்டல்ல; கடல் அவர்களது பிரதேசம். பாக் நீரிணை ராபர்ட் பால்க் என்ற அக்கால (1755-1763) மெட்ராஸ் கவர்னராக இருந்தவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்நீரிணையும், மன்னார் வளைகுடாவும், பாம்பன் கால்வாயால் இணைக்கப்படுகின்றன.இங்கு மீன்கள் வாழ்வதற்கும் பெருகுவதற்கும் இயற்கைச் சூழ்நிலை வழிவகுக்கிறது. ஆகையால் தொன்றுதொட்டே இவ்விடம் மீனவர்கள் விரும்பிய கடலாகும். இன்றைய பிரச்னைகளுக்கு ஆரம்பம், இந்திய – இலங்கை அரசுகள், அரசியல் ரீதியாக எடுத்த சில முக்கிய முடிவுகள் என்றே கூறலாம். 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முடிவுகள், தமிழ்நாட்டு மீனவர்களுக்குச் சாதகமாக இருக்கவில்லை.இரண்டாவது நூலில், ஆசிரியர், முக்கியமான புள்ளி விபரங்களைப் பட்டியலிட்டுத் தந்துள்ளார். அது, படிப்பவர்களுக்கு ஒரு நல்ல அடித்தளமாகக் காணப்படுகிறது.கடந்த, 1950களில், இறால் மீன் வகை அதிகமாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. முக்கியமாக அமெரிக்காவும், ஜப்பானும் இவ்வகை மீனை வாங்கத் தொடங்கியது. வணிக நிலை கருதி, அரசும் இதற்காக அதுவரை இல்லாத அளவில் மீன்பிடி வசதிகளை அதிகரித்தது. முதல் கட்டமாக, சாதாரண படகுகளிலிருந்து விசைப்படகுகளுக்கும், சாதாரண வலைகளுக்குப் பதிலாக இழுவலைகளுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன. மீன ஏற்றுமதிக்காக, மத்திய அரசு, Marine Exports Development Authority (MPEDA) என்ற ஒரு அமைப்பைத் தொடங்கியது. இதன் மூலம் மீன் ஏற்றுமதி 1961ல், 17,295 டன்னிலிருந்து, 2001ம் ஆண்டில், 4,24,320 டன்னாக உயர்ந்தது.இதே போல இலங்கையிலும் ஏற்றுமதி பெருகிற்று. இவ்வணிக உயர்வும், லாபமும், இந்த பாரம்பரியத் தொழிலை, மீனவர்கள் கைகளிலிருந்து மற்ற வணிகர்கள் கைகளுக்கு மாற்றியது! பல தமிழ் நாட்டு அரசியல்வாதிகள், விசைப் படகுகளின் மகிமையைத் தெரிந்து கொண்டு அவற்றில் மூலதனமிட்டனர். இழுவலைகள் தற்காலிகமாகப் பெரும் லாபத்தை அளித்தாலும், காலப்போக்கில் மீன் இனத்திற்குப் பெரும் பங்கத்தை விளைவிக்கும் என்பது மீனவச் சமூகத்திற்குத் தெரிந்த விஷயம். ஆனால், இத்தொழில் வணிகர்களுக்கு ஒரு வியாபாரமே. 285.2 ஏக்கர் அளவிலான கச்சத்தீவு, ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கில், 10 மைல் தொலைவில் உள்ளது. இது, மனிதர்கள் வாழும் பகுதியல்ல. பழங்காலத்தில் தமிழக மீனவர்கள் அக்காலத்திய வலைகளைக் காயப் போடுவதற்குப் பயன்படுத்தி வந்தனர். புனித அந்தோணியாரின் சர்ச் ஒன்று அங்குள்ளது. மார்ச் மாதத்தில், இங்கு நடைபெறும் திருவிழாவில், தமிழக – இலங்கை மீனவர்கள் பங்கு கொள்வர். 1972, ராமநாதபுரம் கெஜட் பதிவின் படி, இத்திருவிழாவின் போது, தங்கச்சிமடத்து கத்தோலிக்க குரு ஒருவர், அங்கு பூஜைக்காகச் செல்வது வழக்கம். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில், ராமநாதபுரத்து மீனவரான சீனிக்குப்பன் படையாச்சி என்பவரால் கட்டப்பட்டது என நம்பப் படுகிறது. இந்நூலில், சூரியநாராயணன், அன்றைய பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, 1960, செப்டம்பரில், ராஜ்யசபையில் குறிப்பிட்டதைச் சுட்டுகிறார். நேரு சொன்னது: ‘‘ஒரு ஜமீன்தாரால் இத்தீவு சொந்தம் கொண்டாடப்பட்டது. இப்போதோ ஜமீன்தாரி முறை கிடையாது. ஆகையால் சொந்தம் குறித்துத் தெளிவாகச் சொல்ல முடியாது,’’ என்பதையும் திருமதி இந்திரா காந்தி, மார்ச் 1968ல், “நாம் இலங்கை அரசுடனும் மக்களுடனும் நல்லுறவு கொண்டுள்ளோம். இப்போது இத்தீவைப் பற்றிப் பேசினால் தொந்தரவுகள் உண்டாகலாம்,” என்றதையும் காட்டுகிறார். அது மட்டுமின்றி அன்றைய வெளி விவகாரத்துறையின் அமைச்சரான, பி.ஆர்.பகத் ஜி.ஜி.ஸ்வெல் கேட்ட கேள்விக்கு, குழப்பமுண்டாக்கும் வகையிலான பதிலை அளித்தாரெனவும் குறிப்பிடுகிறார். ஆகையால் ஆரம்பத்திலிருந்தே கச்சத்தீவு விவகாரம் இந்திய அரசால் சரியாகக் கையாளப்படவில்லை என்கிறார்.அதே நேரத்தில் இலங்கையிலோ அவ்வரசு தீர்க்கமான முடிவைத் தொடக்கத்திலிருந்தே கொண்டிருந்தது என்றும் கூறுகிறார்.கடந்த, 1974 தொடக்கத்திலேயே இந்திய அரசு, கச்சத்தீவை இலங்கைக்கு அளித்து விட நினைத்து விட்டது என்கிறார். ஜனவரி, 1974ல், இலங்கையின், சிரிமாவோ பண்டாரநாயகா, இந்தியா வந்த போது, இந்திரா காந்தியுடன் எடுத்துக் கொண்ட முடிவில் இரண்டு ஷரத்துகள் இருந்தன.நாடின்றி இருப்பவர்களை, இரு நாடுகளும் சமமாகப் பங்கேற்று, குடியுரிமை, தலா, 75,000 நபர்களுக்கும், பின்னர் பெருகும் அவர்களது சந்ததியர்களுக்கும் வழங்க வேண்டும். கடல்சார் எல்லையை, இருநாடுகளும் கலந்து முடிவெடுக்க வேண்டும்.இந்த முடிவு, ஜூன், 28, 1974 அன்று செய்கைக்கு வந்தது. கச்சத்தீவைப் பொறுத்தமட்டில், அது இலங்கைக்குச் சொந்தமானதென ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால், “இந்திய – இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு செல்ல, பயண பத்திரங்கள் வேண்டிஇருக்காது என்றும் கூறியது. இந்நூலில் பல பழைய ஆவணங்களும் குறிக்கப்பட்டுள்ளதால், இது முக்கியமாகப் படிக்க வேண்டிய நூலாகிறது. உதாரணமாக, 1921ம் ஆண்டு ஆவணம், எல்லைகளைக் குறித்துப் பேசுகிறதைச் சுட்டுகிறது.அன்றைய ஜனசங்கம், (பின்னர் பா.ஜ.,) 1974 முடிவு குறித்துப் பிரச்னை எழுப்பலாம் என்று, அன்றைய காங்கிரஸ் அரசு மிகவும் ரகசியமாகக் கையாண்ட விதத்தையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். அதே போல, 1976ம் ஆண்டு முடிவு குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. 1972ம் ஆண்டின், தமிழ்நாடு கெஜட்டில், கச்சத்தீவு பற்றி குறிப்பு ஒன்றுமே இல்லாதது குறித்தும் சொல்லப்படுகிறது. ஒரு முறை, இலங்கையில் நடந்த பேச்சு வார்த்தைகள் குறித்து எழுதுகையில், இந்தியாவின் மெத்தனப் போக்கு குறிப்பிடப்படுகிறது, “சாஸ்திரி மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் போது, தமிழ் நாட்டுப் பிரதிநிதி வாயே திறக்கவில்லை,” என்பதை ஒரு பத்திரிகையாளர் சொல்லக் கேட்டதையும் குறிப்பிடுகிறார்.இந்த மூன்று நூல்களில் முக்கியமானது, மூன்றாவதாகும்.சர்வதேச கடல்சார் விதிமுறைகளில் சரியாக விவரிக்கப்படாதது Right Of Innocent Passage என்பதாகும். பழங்காலத்து விதிமுறைகளின் படி, கடல் எல்லோருக்கும் பொதுவானது. UNCLOS எனப்படும், ஐக்கிய நாடுகளின் கடல்சார் விதிகள், குற்றமற்ற பாதை என்பது எங்கேயும் வரையறுக்கப்படவில்லை. கடலில் எல்லைகள் பாதுகாப்பிற்காக நிர்ணயிக்கப்பட்டவேயன்றி, தமது தொழில் சார்ந்து, மீனவர்கள், கடல் எல்லையைக் கடப்பது குற்றமற்ற ஒரு செய்கையேயாகும். ஆகையால், அவர்களைக் கைது செய்வது சரியல்ல என்பது உணரப்பட வேண்டும். ஆகையால், இது பற்றிய உணர்வுப் பூரணமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை இந்நூல் குறிப்பிட்டுக் காட்டுகிறது. பன்னாட்டு விவகாரங்கள் உதாரணங்களாகக் காட்டப்பட்டுள்ளன. ஒரு அழகான கதை இறுதியில் சொல்லப்படுகிறது. அது, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பொருந்தும்.ஒரு ஆதிவாசிக் கிராமத்துப் பள்ளியில், ஓட்டப்பந்தயம் வைக்கப்பட்டது. ஒரு பையன் எல்லோருக்கும் முன்னர் ஓடிக் கொண்டிருந்தான். ஆனால், பந்தயம் முடிவுக்கு முன்னால் சற்றே நின்று கொண்டான். ஏனெனக் கேட்ட போது, ‘‘பின்னால் வருபவர்களும் வரட்டும். எல்லோரும் சேர்ந்தே ஓடலாம்,’’ என்றானாம். கடல் பொதுவானது. எல்லோரும் சேர்ந்து செயல்பட்டால் அனைவருக்கும் பயனாகும்.
KACHCHTIVU and the PROBLEMS of INDIAN FISHERMEN in the PALK BAY
- 
                                                                
                                                                History and Culture of Tamil Nadu. (As gleaned from Sanskrit Inscriptions) Volume2 (c1310 A.D.c.1885 A.D.)D.K.Printworld (P) Ltd., Sri Kunj F52, Bali Nagar, New Delhi 110 015.தமிழகத்தில் கிடைத்துள்ள சமஸ்கிருத (வடமொழி) கல்வெட்டுகள் செப்பேடுகளில் காணப்படும் வரலாற்றுச் சான்றுகள் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. ஆசிரியரின் முந்தைய நூலின் பல்லவர், சோழர், பாண்டியர் ஆட்சி காலத்திய (கி.பி.1310 வரை) கல்வெட்டுகள் ஆராயப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து விஜயநகர், நாயகர், மராத்தியர் கால சாசனங்கள் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. நிர்வாகம், பொருளாதாரம், சமூக வாழ்க்கை, கல்வி, இலக்கியம், சமயம் போன்ற தலைப்புகளில் வழங்கப்பட்டுள்ளன. சமஸ்கிருதம் தமிழ் கலந்த மணி பிரவாளம் பாணியில் அமைந்த கல்வெட்டுகளும் உள்ளன. கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் போன்ற அரசர்கள் ஆண்டபோது இருந்த பலம் பொருந்திய ஆட்சி பிற்காலத்தில் வலிவு இழந்து சிற்றரசர்கள் ஆங்காங்கே தலை தூக்கினர் என்பதை சாசனங்கள் மூலம் அறிகிறோம். மேலும், இந்நூலில் அரசுக் கோப்பைகளை தயாரித்த கவிஞர்களை பற்றி குறிப்புகள் கிடைத்துள்ளன. சுவைமிக்க பல செய்திகளை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். அணிந்துரை வழங்கிய கல்வெட்டு அறிஞர் டாக்டர் கே.பி.ரமேஷ் கூறியுள்ளபடி, சமஸ்கிருத மொழி எவ்வாறு இணைப்பு மொழியாக திகழ்ந்தது என்பதை அறிய இந்நூல் துணை செய்கிறது. நல்ல பல நிழற்படங்கள் சேர்ந்திருப்பது சிறப்பாக அமைந்துள்ளது. 
- 
                                                                
                                                                Young kids Press, 1620 JBlock, 16th main Road, Anna Nagar, Chennai600 040. (Pages: 408. Price: Rs.140). நமது பாரம்பரியப் பெருமைக்குக் கட்டியம் கூறி இன்றளவும் உயர்ந்து நிற்கும் இரு பெரும் இதிகாசங்களான ராமாயணமும் மகாபாரதமும் மகோன்னதமான தார்மீக நெறிகளை உள்ளடக்கியவை. வியாசர் எழுதினார். பின் பல மொழிகளில் பெயர்க்கப்பட்ட மகாபாரதத்தை நீலா சுப்ரமணியம் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். இவருடைய ஆங்கிலம் எளிமையாக, சின்னச் சின்ன வாக்கியங்களுடன் அமைந்திருக்கிறது. அதனால் வாசிப்பதற்கு எளிமையாக இருக்கிறது. கதையில் நிகழும் சம்பவங்களை விளக்கி படங்கள் வெளியிட்டிருக்கின்றனர். நல்ல காகிதத்தில் நேர்த்தியாக அச்சிட்டு, பிரசுரம் செய்திருக்கின்றனர். மகாபாரதத்தில் சுவாரஸ்யங்கள் நிறைந்த கதைப் பகுதிகள் அதிகம் உண்டு. எனவே, படிப்பவர்களின் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டக்கூடிய அம்சங்கள் நிறைந்தது மகாபாரதம் என்பதைச் சொல்லவே தேவையில்லை. 
- 
                                                                
                                                                Sudandhira Publications, Rajapalayam. (பக்கம்:227)இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை சான்றாதாரங்களுடன் தமிழிலும், ஆங்கிலத்திலும் துல்லியமாகப் படைக்கும் ஆற்றல்மிகு டாக்டர்.வி.வெங்கட்ராமனின் இந்நூல் ஆங்கிலத்தில் படைக்கப்பட்டு, இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் உள்ள 17 கட்டுரைகளும் அபூர்வமானவை, "இந்திய தேசியம், "பஞ்சாபின் ஆவேசம்', "கலியுக பிரகவாதன்', "சுதந்திரச் சங்கும், உப்புசத்தியாகிரகமும்', "ராபர்ட் வில்லியம் டி.ஆஷ் கொலை', "அஹிம்சை' போன்ற பல கட்டுரைகள் மிகவும் சுவாரஸ்யமாகவும் உணர்வு பூர்வமாகவும் படைக்கப்பட்டுள்ளன. நூலாசிரியரின் ஆங்கில நடைக்காகவே, மறுமுறையும் படிக்கலாம். பயனுள்ள வரலாற்றுத் தொகுப்பு 
- 
                                                                
                                                                தமிழ்ப் புத்தகாலயம், 34, சாரங்கபாணி தெரு, தி.நகர், சென்னை-17.திருத்தல உலா செல்பவர்களுக்காக 71 திருத்தலங்களைப் பற்றி விளக்கமாகவும், வரலாற்று குறிப்புகளுடனும் இந்நூலில் விரிவாக தந்துள்ளார் ஆசிரியர்.இவர் ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பணிபுரிந்த காலங்களில் பல விருதுகளையும், பதக்கங்களையும் பெற்றவர். சமயப் பணியிலும் ஈடுபாடு கொண்டு பலரும் அறிந்ததும் அறியாததுமான பல கோவில்களைப் பற்றிய விவரங்களை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் படைத்தளித்துள்ளது சிறப்பாக அமைந்திருக்கிறது 
- 
                                                                
                                                                Palaniappa Brothers, No.25, Peters Road, Chennai 600 014. (Pages: 128).இந்தியத் திருநாட்டின், அதிலும் குறிப்பாக தென்னாட்டின் விடுதலை வேள்விக் களத்தில் நிகழ்ந்த பல, பலரும் அறியப்படாத செய்திகளை ஒன்பது வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்து கொடுத்த ஆய்வுரைகளின் தொகுப்பே இந்நூல். பொதுவாக இந்தியத் திருநாட்டில் விடுதலைக்கு முதற்குரல் 1887ல் சிப்பாய்க் கலகத்தின் வழியாகத் தான் ஒலிக்கத் தொடங்கியது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அதற்கு முன்னரே அதாவது பதினெட்டாம் நூற்றாண்டிற்கு முன்னரேயே விடுதலை வேள்விக்கு தீ மூட்டப்பட்டு விட்டது என்பதை வரலாற்றுச் சரித்திரச் சான்றுகளோடு கருத்தரங்கம் கூட்டி விவாதித்து, ஒன்பது பேராசிரியர் பெருமக்களால் ராஜபாளைய ராஜா கல்லூரியில் வாசித்தளிக்கப்பட்ட ஆய்வு அறிக்கைகளின் ஒட்டு மொத்தமான தொகுப்பே இந்நூல். தமிழ்நாடு, மலபார், திருவனந்தபுரம், கர்நாடகா, ஆந்திரா போன்ற தென்னக மாநிலங்களில் 1800க்கு முன்னரே எவ்வாறு விடுதலைக்கு வித்திட்ட சரித்திர நாயகர்களின் வீர நிகழ்வுகளை எளிமையான ஆங்கிலத்தில் தந்துள்ளனர் கட்டுரை ஆசிரியர்கள்.தமிழ் நூல்களை மட்டும் பதிப்பித்து வருகின்ற தமிழகப் பதிப்பாளர்கள் மத்தியில் பழனியப்பா ஆங்கில நூலையும் அழகுற பதிப்பித்துத் தர முடியும் எனக் கூறி, இந்நூலை வாசகர்களுக்கு முதல் வரவாக தந்திருக்கிறது. சரித்திர ஆய்வாளர்களுக்கு இந்நூல் ஒரு வரலாற்று ஆவணம். 
- 
                                                                
                                                                குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 208)கட்டுரை ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல், இந்நூலில் உள்ள 100 கட்டுரைகளும், நாட்டுப் பற்று, சமூக உணர்வு, தியாக சிந்தனை, கடின உழைப்பு, தன்னம்பிக் கை, மனித நேயம், உலகப் பார்வை ஆகியவை படிப்போர் நெஞ்சங்களில் பதிய வைக்கும் வகையில் அமைந்துள்ளன.சுதந்திரப் போராட்டம், உலகப் போர், அறிவியல் அற்புதங்கள், நாட்டை உலுக்கிய புரட்சிகள் ஆகிய பல தரப்பட்ட விஷயங்கள், அவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட மனிதர்கள் பற்றி எல்லாம், சுருக்கமாக, அதே நேரத்தில் அவசியமான தகவல்கள் அனைத்தையும், சுவைபட, எளிய தமிழ் நடையில் தொகுத்து வழங்கியுள்ளார். விடுதலைப் போராட்ட வீரர் பாஷ்யம், கணித மேதை ராமானுஜன், சுவாமி விவேகானந்தர், ஜி.சுப்ரமணிய ஐயர், வ.உ.சி., டார்வின் ஆகியோர் பற்றிய கட்டுரைகளில் பல புதிய தகவல்கள் உள்ளன. பொது உடைமைக் கொள்கையாளரான ஆசிரியர் தனது சொந்தக் கருத்துக்களை புகுத்தாமல், உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொல்லியுள்ள நேர்மை பாராட்டுக்குரியது. கட்டுரைகள் மிகச் சிறியதாக இருப்பதால் வாசகர்கள் சிரமப்படாமல் நிறைய தகவல்களைப் படிக்கலாம். இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். 
- 
                                                                
                                                                தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. 
- 
                                                                
                                                                தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. 
- 
                                                                
                                                                தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17 
- 
                                                                
                                                                தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. 
- 
                                                                
                                                                தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. 
- 
                                                                
                                                                தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. 
- 
                                                                
                                                                தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. 
- 
                                                                
                                                                தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17 
- 
                                                                
                                                                தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17 
- 
                                                                
                                                                Vidya Publi cations, 15, First Main Rd, Ponmeni Jayanagar, Madurai625010. Phone: (0452) 2380042.ஆங்கில நூல். அதுவும் நவீன வரலாற்றுப் பேராசிரியர் உருவாக்கிய நூல். சமகால வரலாறு, மற்றும் கடந்த 200 ஆண்டுகளில் நடந்த பல சம்பவங்களை தொடர்ச்சியாக அறிந்து கொள்வது சிரமம். வரலாறு என்றாலே ஆர்வம் குறைந்து கணினியில் தகவல் திரட்டும் காலத்தில் உண்மைத் தகவல்களை குவிஸ் பாணியில் தொகுத்த ஆசிரியர் முயற்சிக்கு பாராட்டுதல்கள்.சமூக, பொருளாதார முக்கியத்துவங்கள் வாய்ந்த தகவல்களை இதில் சொல்லியிருப்பதையும், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு மட்டும் அல்ல, வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொள்ள உதவும் வகையில் கேள்விகளும், பதிலும் அமைந்திருக்கின்றன. அதற்கு உதவியாக பத்து பக்கங்களில் வரலாற்றின் சுருக்கம் அழகுறத் தரப்பட்டிருக்கிறது.குவிஸ் பாணியில் உருவாக்கப்பட்ட இந்த நூலில் 1200 கேள்விகள், முதல் பாதியில் கேள்விகள், அக் கேள்விகளுடைய எண்களுக்கு ஏற்ப பிற்பகுதியில் பதில்கள், சுருக்கமாக, நயமாக, தெளிவாக தொகுத் தளிக்கப்பட்டிருக்கிறது.அதில் சில தகவல்கள்:அரசியல் தீர்க்க தரிசனத்தை இந்தியருக்கு வழிகாட்டிய பிரிட்டிஷ் நிர்வாகி யார் என்ற கேள்விக்கு பதில் ரிப்பன் (எண்:51), இந்திய தேசிய காங்கிரசில் உரையாற்றிய கோல்கட்டாவின் முதல் பட்டதாரிப் பெண் காதம்பினி கங்குலி (எண்75), "சாதி ஒழிய வேண்டும், அல்லது நாம் ஒழிய வேண்டும் என்று 1883ல் முழங்கிய தேசியவாதி ஜி.சுப்பிரமணிய அய்யர் (எண் 100), "பாலபாரதி' என்ற இலக்கிய இதழை நடத்தியது வ.வெ.சு அய்யர் (எண் 281) வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தைத் தலைமை ஏற்றது யார்? அவர் தலைமையில் சென்ற தொண்டர் எண்ணிக்கை - ராஜாஜி, தொண்டர்கள் நூறுபேர் (எண்.863). இப்படி பல முக்கியத் தகவல்கள் உண்டு. இந்தியா பிரிவு பட்ட நாளன்று, "அது துயர நாள், இந்தியாவின் அழிவுக்குக் காரணம்' என்று மாபெரும் தேசியவாதி ஆசார்ய கிருபளானி கூறிய தகவல், "சுதேசி' என்று எல்லாரும் அடிக்கடி கூறும் வார்த்தைக்கு சரியான அர்த்தம் 1198 ஆம் கேள்விக்கு பதிலாக அமைந்திருக்கிறது.மொத்தத்தில் எது சரியான தகவல் என்றறியாமல் குழம்பும் நிலையை மாற்றிடவும், வரலாற்றின் சில நயமான பகுதிகளை ஆசிரியர் இந்த நூலில் தொகுத் தளித்த விதமும் பாராட்டுதற்குரியது. பள்ளிகள், கல்லூரிகளில் இருக்க வேண்டிய நூல். பொது அறிவு என்ற பெயரில் பல தகவல்களைத் தவறாகத் தரும் காலத்தில் நயமாக முகிழ்த்த நறுமலர். 
- 
                                                                
                                                                சு.முத்து, வெளியீடு: சுரா புக்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை. (பக்கம்: 216) பாரத நாடு பழங்காலத் தில் இருந்தே மனித குலத் தின் உடல் நலத்திற்கு, எத்தகைய பயிற்சிகள் தேவை என் பதை கலைகளின் மூலமும், யோகாசனங்கள் மூலமும் விளங்க எடுத்துரைத்துள் ளது. இந்த வரிசையில், சுராவின் "தந்திரோபதி' ஒரு முக்கியமான மைல்கல் எனலாம்.கையினால் செய்யப்படும் முத்திரைகளையும், ஆசனங்களையும் விளக்கி அவற்றின் பயன்பாட்டையும், பாதிப் பையும் எடுத்துரைக்கிறார். முத்திரைகள் வெளிப்படுத் தும் உணர்ச்சியையும், அவற் றுக்கான ஸ்லோகங்களையும் பக்கம்-11ல் தெளிவாக்கிறார். அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் ஒரே வகையான அணுக்களின் கூட்டிணைவிற்கும், முத்திரைகளுக் கும் உள்ள தொடர்பை கூறி முத்திரைகளின் மூலம் வரும் தெய்வீக சக்தியையும் விளக் குகிறார். படங்கள் மூலம், எளிதாக முத்திரைகளைக் காண்பித்து அவற்றின் செயல் முறை, கால அளவு, பயன் கள் மற்றும் அவற்றை செய் யும்போது பின்பற்ற வேண் டிய எச்சரிக்கைகளையும் விரிவாக எடுத்துரைப்பது நூலின் தனித்தன்மை ஆகும்.அத்தியாயம் -2ல் இந்தியாவின் மிகவும் பழமை வாய்ந்த தந்திரமார்க்கமானது, உன்னத மனித நிலைக்கு சிறந்த மார்க் கம் என்பதைக் கூறி யோகிகள் இதைத் தான் பின்பற்றி ஆன்மிக வளத்துடன் இருந்தனர் என்பதையும், ஆன்மிகம் என்பது மதமல்ல, அது கொள்கை மற்றும் கோட் பாடுகளின் அடிப்படையில் அமைந்த, அதே சமயம் அறிவியல் பூர்வமானது என்பதையும் எல்லாரும் புரிந்து கொள் ளும் வண்ணம் விளக்கப் பட்டிருக்கிறது.அறிவியல் அடிப்படையில் நமது கலாசாரத்தின் முக் கியத்துவத்தை விளக்கும் நூல். 
- 
                                                                
                                                                History and Culture of Tamil Nadu: (As gleaned from Sanskrit Inscriptions) Volume1 (upto c.1310 A.D)D.K.Printworld (P) Ltd., Sri Kunj, F52, Bali Nagar, New Delhi110 015.தமிழக வரலாற்றை தொடர்ச்சியாக எழுதுவதற்கு இலக்கியம் தவிர கல்வெட்டுகள் பெரும் துணை புரிகின்றன. அவற்றில் பெரும்பாலானவை தமிழ் கல்வெட்டுகளே ஆகும். ஆனால், பல கல்வெட்டுகள் சமஸ்கிருதத்திலும் உள்ளன. அக்காலத்தில் சமஸ்கிருத மொழி இந்திய துணைக் கண்டத்தின் இணைப்பு மொழியாக இருந்ததால் அம்மொழியிலும் சாசனங்கள் இங்கு காணப்படுகின்றன. இரு மொழியில் எழுதப்பட்ட பல சாசனங்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக பாண்டியரது தளவாய்புர செப்பேட்டை குறிக்கலாம்.தமிழகத்தில் பல்லவர், சோழர், பாண்டியர் காலத்தை சேர்ந்த சமஸ்கிருத கல்வெட்டுகளையும் சேப்பேடுகளிலும் கிடைக்கின்ற வரலாற்று செய்திகளை நன்கு ஆராய்ந்து ஏழு தலைப்புகளில் இவ்வாசிரியர் கொடுத்துள்ளார். அரசியல் அமைப்பு, நிர்வாகம், ராணுவம், பொருளாதாரம், சமூக வாழ்க்கை, கல்வி, இலக்கியம், சமய வளர்ச்சி போன்ற தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கிடைத்துள்ள அரிய பல சான்றுகள் எவ்வாறு பயனுள்ளவையாக அமைந்துள்ளன என்பதை ஆசிரியர் ஆங்காங்கே விளக்கியுள்ளார். எடுத்துக்காட்டாக இலக்கியம், கல்வி என்ற தலைப்பில் அரசருக்கு அளிக்கப்பட்ட கல்வி முறையைப் பற்றியும், அக்காலத்தில் வாழ்ந்த சிறந்த வடமொழிப் புலவர்களை பற்றியும் பல சான்றுகள் கிடைத்துள்ளன.அணிந்துரையில் பேராசிரியர் கே.வி.ராமன் குறிப்பிட்டுள்ளது போன்று பயனுள்ள பல செய்திகளை தரும் வடமொழிக் கல்வெட்டுகளை இந்நூல் ஆசிரியர் நன்கு விளக்கியுள்ளார். 
- 
                                                                
                                                                சாந்தி பதிப்பகம், சென்னை-2. (பக்கம்: 336. விலை: ரூ.150). உலகப் போர் வரலாற்று ஏடுகளில் நிலையாக இடம் பெறுவதாகும். கி.பி.1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப் போர், அகில உலகையும் கதி கலங்க வைத்தது. வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் உலக நிகழ்வுகள், தலைவர்களின் செயல்கள், ஜனநாயகம், சர்வாதிகாரத்தின் இடையே கிளர்ந்த போர் - மோதல், விளைந்த 99 உடன்படிக்கையால் எழுந்த சர்ச்சை என்ற எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடி நூலாக ஆசிரியர் அரும்பாடுபட்டு சமைத்துள்ளார்.போலந்து படை எடுப்பில் தொடங்கி ரஷ்யா - பின்லாந்து போர், நார்வே, டென்மார்க், ஹாலந்து படையெடுப்புகள், பிரான்ஸ் அடி பணிதல், மத்திய தரைக்கடல், மாஸ்கோ முற்றுகை, கசபிளாங்கா மாநாடு, பல்ஜ் மோதல், ரைன் ஊடுருவல், ஜெர்மனியின் சரண் அடைவு, அணுகுண்டு வீச்சு, ஜப்பான் சரணடைதல் என்று 36 தலைப்புகளில் நடந்தவற்றை வாசகர் முன் கொண்டு நிறுத்துகிறார் ஆசிரியர்.போர் நாயகர்கள் என்ற பிற்சேர்க்கையில் ஹிட்லர், சர்ச்சில் ரூஸ்வெல்ட், ஸ்டாலின், முசோலினி, டோ÷ஷா, டிகால், டிட்டோ, சுபாஷ் சந்திரபோஸ் என்று 74 பிரதான புள்ளிகளின் சிறு குறிப்பையும் தந்துள்ளார். உள்நாட்டுத் தளபதி ஸ்டாபன்பெர்க் ஹிட்லரைக் கொல்ல சதி செய்ததும் அதிலிருந்து ஹிட்லர் தப்பியதும் (பக்.206-207) அழகாக விளக்கியுள்ளார். உலக வரலாற்றில் உலா காண விரும்புவோர் படிக்க வேண்டிய நூல். 
- 
                                                                
                                                                நல்ல தொரு விமர்சகரும், ஓவியம், சிற்பங்களில் தேர்ந்தவர் என்ற முறையில் சிறப்பாக இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாமக்கல் அனுமாரின் உச்சந்தலையில் கற்றைக் குடுமி, வேலூர்க் கோட்டையில் அமைந்த கோவிலில் உள்ள ஜ்வரகண்டேச்வரர் கல்யாண மண்டபம் பற்றிய தகவல்கள், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்பு சுல்தான் வசித்த மண்டபத்தின் எளிமை என்று பல விஷயங்கள் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. வாசித்துப் பாருங்கள். 
 
                                            
                                                தமிழ்  புத்தகங்கள்
   தமிழ்  புத்தகங்கள்   
                                                   
                                        
 
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                  
                                                  
                                                  
                                                  
                                                  
                                                  
                                                            
                                                         
                                                            
                                                         
                                                            
                                                         
                                                            
                                                         
                                                            
                                                         
                                                            
                                                         
                                                            
                                                         
                                                            
                                                         
                                                            
                                                         
                                                            
                                                         
                                                            
                                                         
                                                            
                                                         
                                            
                                               






 
 
       
      
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்