Advertisement

பணம் புரிந்தவன்

5

பணம் புரிந்தவன்

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.மக்களின் பணத்தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் வருடக் கணக்கில் நடத்தப்படும் பள்ளிப் பாடங்களில் பணம் பற்றி எதுவுமே சொல்லிக் ‌கொடுப்பதில்லை என்பதுதான். முடிவில் பணத்தை அடைய வேலை செய்ய வேண்டியதாகிறது.பணம் அவர்களுக்காக எப்படியெல்லாம் வேலை செய்யும் என்பதைக் கற்றுக்கொள்ளத் தவறி விடுகிறார்கள். பணக்கார்ரகள் ஆவதற்கு ஏராளமாக சம்பாதிக்க வேண்டும் என்ற உங்களின் தவறான கருத்தைத் தகர்த்தெரிந்து பல புதிய வழிமுறைகளை இந்த நூல் சொல்லித் தருகிறது வீடு என்பது ஒரு சொத்து என்ற உங்கள் நம்பிக்கைக்கு சவால் விடுக்கும். தங்கள் குழந்தைகளுக்கு பணத்தை சாமர்த்தியமாக கையாளக் கற்றுத்தருவதற்கு பள்ளிகளை நம்பி இருக்க முடியாது என்பதை பெற்றோருக்கு உணர்த்தும். உங்களின் சொத்து எது.... கடன் சுமை எது என்பதை திட்டவட்டமாகத் ‌தீர்மானிக்க உதவும். உங்கள் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பண வசதியுடன் வெற்றிகரமான வாழ்க்கை வாழ அவர்களுக்கு, பணம் பற்றி புரிய வைப்பது எப்படி என்பதை உங்களுக்கு இந்த நூல் கற்றுத் தரும்.

ipaper

வாசகர்கள் கருத்துகள் (5)

Arulsuhanthan அக் 22, 2025 08:32 PM

பணம் புரிந்தவன் தமிழ் book

Vijayakumar டிச 17, 2025 08:41 PM

பணம் புரிந்தவன் book

Panneerselvam v டிச 24, 2025 08:02 PM

இந்த புத்தகம் எனக்கு தேவைபடுகிறது ,கிடைக்குமா

Panneerselvam v பிப் 01, 2026 10:27 PM

I want this book immediately

Surya பிப் 08, 2026 06:52 PM

எனக்கு அந்த புக் வேண்டும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


  • கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான் கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-1. (பக்கம்: 68).சுய முன்னேற்ற வகைப் புத்தகம் இது. மிகச் சிறிய புத்தகம். சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருப்பதால் அலுப்பு தட்டவில்லை.

  • கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 132. விலை: ரூ.50). ஆரிஸன் ஸ்வெட் மார்டன் எழுதியுள்ள "ஸக்ஸஸ் நக்கட்ஸ்' என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம் இந்நூல். வெற்றி இலக்கை எட்ட எதிர்மறையாக தவிர்க்க வேண்டியவை 16 தலைப்புகளிலும் நேர்மறை ஆலோசனைகளாக ஆய்வுகளாக 18 தலைப்புகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. வழக்கமாக தரப்படும் தலைப்பு எண். முறையாக சொல்ல வரும் விஷயங்களின் அணிவகுப்பு, தொடர்புடைய தலைப்புகள் அடுத்தடுத்து இடம் பெறுதல் என்ற எந்த விதிகளையும் ஆசிரியர் பின்பற்றவில்லை. குறள் போல பல இடங்களிலும், ஆத்திச்சூடி விளக்கமாக ஒரு வழியிலும் பல இடங்களில் கூற வரும் கருத்து குதி போட்டு வருகிறது. பலர் விரும்ப, மிகப் பிரபலமாக என்ன செய்ய? (பக்.29, 77), வாய்ப்பு எங்கே (பக்.37), வாய்ப்பு இல்லையா (பக்.8), வாய்ப்பை உருவாக்கு (பக்.103), அதிர்ஷ்டத்தை தவற விட்டவர் யார் யார் (பக்.14), வாய்ப்புகள் யாருக்கு வாய்க்காது (பக்.23) என்பவை காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள சொல்லப்படும் அறிவுரை. நூல் விஷயங்களை அட்டவணை இட்டு பொருள் ரீதியாக அழகுற கோர்த்து இருக்கலாம். புதுமை என நினைத்து அனுபவம் அப்படியே பிரகடனம் ஆகி விட்டதோ?புறம் பேசுவதை... வெட்டி வேலை செய்வதை... முணுமுணுப்பதை... நேரத்தை வீணடிப்பதை... விதி உங்களுக்கு எதிராக உள்ளது என்று சொல்வதை... காலத்தை குற்றம் சொல்வதை... எதிர்காலத்தில் தீமையே விளையும் என்று எதிர்பார்ப்பதை... முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு சுற்றுவ‌தை... குறை காண்பது, தொணதொணப்பது... கவலைப்படுவது இவற்றை.... காரணம் இல்லாமல் கோபம் கொள்வதை... செய்து கொண்டிருக்கும் வேலையைப் பற்றிக் குறை சொல்வதை... பெரிய பேச்சுப் பேசிக் கொண்டே சிறிய செயல்களைச் செய்வ‌தை... சின்ன விஷயங்களுக்கெல்லாம் திட்டிக் கொண்டும், கோபப்பட்டுக் கொண்டும் இருப்பதை... உங்களால் செய்ய முடிந்‌ததை செய்யாமல் அதைப் பற்றி டம்பமடித்துக் கொண்டிருப்பதை... வாழ்க்கை மிகவும் சலிப்பூட்டுவது, வாழத் தகுதியற்றது என்று எண்ணுவதை... உங்களையே குறைவாக மதிப்பிடுவதை... உங்கள் திறமைகளை லேசாகக் கருதுவதை... நண்பர்களையும், தெரிந்தவர்களையும் பற்றி மோசமாகப் பேசுவதை... கடந்த காலத்தைப் பற்றி புலம்புவதையும், விரும்பத்தகாத அனுபவங்களை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதையும்... விட்டொழியுங்கள்.புதைத்து விடுங்கள். சிந்திக்கத் தூண்டும் இந்த வரிகளைத் தியானியுங்கள்- உங்கள் வாழ்க்கைப் பயணம் வெற்றிகரமாகும்.

  • கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .

  • கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .

  • கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 . ( விலை :ரூ 30 )

  • கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .

  • கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .

  • கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.உங்களின் இறுக்கமான மனநிலையை கட்டவிழ்த்து சிந்தனையைச் சீர் செய்து, சிகரத்தை நோக்கி நடக்க வைக்கும் புத்தகம் இது.

  • கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .

  • கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712தொடர்பு கொள்ளுதலிலும் வாழ்க்கையிலும் வெற்றி பெறுவது எப்படி? ஏதென்ஸ் நகருக்குச் செல்லும் வழியில்உள்ள மலையடிவாரத்தில் தனது குடிசையின் முன் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு தத்துவ ஞானியைப் பற்றி ஈசாப் குட்டிக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. அந்த வழியே வந்த பயணி, அவரை நெருங்கி, வணக்கம் பெரியவரே. நான் ஏதென்ஸ் நகர‌ை நோக்கிச் செல்கிறேன். அங்குள்ள மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நீங்கள் எனக்குச் சொல்ல முடியுமா? என்று கேட்டார். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று திருப்பிக் ‌கேட்டார் தத்துவஞானி. நான் சார்டிஸ் நகரிலிருந்து நகரிலிருந்து வருகிறேன். உங்களிடம் சொல்வதில் தயக்கமில்லை. சார்டிஸ் மக்கள் நட்பு பாராட்டாதவர்கள், நம்ப முடியாதவர்கள், எந்த வகையிலும் உதவி செய்ய மாட்டார்ள். நான் அங்கிருந்து புறப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். ஏதென்ஸ் நகரிலாவது நல்லவர்கள் இருப்பார்கள் என்று நம்புகிறேன் என்று பதில் சொன்னார் அந்தப் பயணி. மன்னித்துக் கொள்ளுங்கள் நண்பரே, ஏதென்ஸ் நகர மக்களும், நீங்கள் பார்த்த சார்டிஸ் நகர மக்களைப்போலவே இருப்பதைத்தான் நீங்கள் பார்ப்பீர்கள் என்றார் தத்துவஞானி. ஏமாற்றத்துடன் பயணத்தைத் தொடர்ந்தார் அந்தப் பயணி. சிறிது நேரம் கழித்து அங்கு வந்த மற்றொரு பயணி, பெரியவரே, நான் சார்டிஸ் நகரிலிருந்து ஏதென்ஸ் செல்கிறேன். சார்டிஸ் நகரில் எல்லோரும் நல்லவர்கள். நட்பாகப் பழகும் இனியவர்கள். ஒருவருக்‌கொருவர் உதவிக் கொள்பவர்கள். ஏதென்ஸ் நகர மக்கள் இதில் பாதியளவு பண்புடன் இருந்தால் கூட மகிழ்ச்சி‌யடைவேன் என்று தெரிவித்தார். மகிழ்ச்சி நண்பரே, ஏதென்ஸ் நகர மக்களும், சார்டிஸ் நகர மக்களைப் போல் அப்படியே இருப்பதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள் என்றார் தத்துவ ஞானி. மிகுந்த உற்சாகத்துடன் புறப்பட்டுச் சென்றார் இரண்டாவது பயணி. மற்றவர்களிடம் நாம் ‌எதைக் காண விரும்பகிறோமோ அதைக் காண்கிறோம் (இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி) என்பதையும்,சுய முழுமை பெறும் தீர்க்கதரிசனத்தையும், மேலே கூறப்பட்ட தத்துவ ஞானியின் கதை எளிமையாக விளக்குகிறது. மதிப்பீடுகள், நம்பிக்கைள், சிந்தனைகள் மிக முக்கியமானவை. ஏனெனில் இவைதாம் நம்மையும் நமது வாழ்வையும் வடிவமைக்கின்றன. இவற்றின் மூலமாகவே நாம் இந்த உலகைக் காண்கிறோம். நாம் கண்ணால் காணுகின்ற, காதால் கேட்கிற அனைத்துக்கும் இவைதான் வண்ணம் தீட்டுகின்றன. நமது கண்ணோட்டதையும், நமது முடிவுகளையும் இவைதான் நிர்ணயிக்கின்றன. நாம் மற்றவர்களிடம் தொடர்பு கொள்ளும்போது என்ன சொல்கிறோம், எப்படிச் சொல்கிறோம் என்பதையும் தீர்மானிக்கும் காரணிகள் இவைதாம். நமது செயல்பாடுகள், நமது வாழ்க்கைப் பாதை, நமது தொடர்பு‌கொள்ளுதல் ஆகியவற்றுக்கு இவைதான் மவுன வழிகாட்டிகள்.

  • கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.வெறும் வார்த்தைகள் அல்ல வாழ்க்கை. அனுபவத்தைப் பேசி, இளமைக் காலத்தைக் கையில் ஏந்தி, இனிமையாகப் பேசி, வாழ்வு சிறக்க எண்ணம் வளர்‌த்து, கோபம் களைந்து, உழைப்பால் உயர்ந்து, எதிலும் முன்னிலைப்படுத்திக் கொள்வதை வெற்றியின் ரகசியமாய் உணர்ந்து, கடமை கடமை கடமை எனும் தாரக மந்திரத்தைக் கடைப்பிடித்து, கல்வியைக் கண்ணாகக் கருதி, காலத்தைப் பொன்னாக்கி, கேள்விக்குப் பதில் கண்டு, சிரித்து வாழ்ந்து, தாயை வணங்கி, தாழ்வு மனப்பான்மை நீக்கி, திட்டமிட்டுச் செயல்பட்டு, தேர்வில் வெற்றி பெற்று, நம்பிக்கையை வாழ்க்கையாக்கி, நல்லோரிடம் நட்புக் கொண்டு, பாராட்டுப் பெற்று, பாராட்டப் பழகி, புதுமை வேண்டி, நல்வழியில் பொருள் சேர்த்து, மகிழ்ச்சியடைந்து, மனதில் உறுதி கொண்டு, வாழ்க்கையை வசப்படுத்தி வெற்றி பெற்றால், காலத்தையும் வெல்வது உறுதி.

  • கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .

  • வெளியீடு:மதர்ஸ், டிஜி மரியா பிளாட், பத்மாவதி நகர் மெயின் நோடு, மாடம்பாக்கம், சென்னை-600073. எண்ணற்ற வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பிரபல மன நல ஆலோசகர் சி.ஆர்.செலினின் பெரும் வெற்றி பெற்ற ஆடியோ சிடியான ஆழ்மனம் அள்ளித்தரும் பணம் இப்போது புத்தக வடிவில் வந்திருக்கிறது. உங்கள் ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பிய துறையில் வெற்றிகளைக் குவிக்க இப்புத்தகம் வழிகாட்டும்.குடும்பத்தாலும் சமூகத்தாலும் ஏற்படுத்தப்பட்ட பணம் குறித்த மனத்தடைகளே அதை அடைய விடாமல் நம்மைத் தடுக்கின்றன. இத்தடைகள் எவை என்று உணர்வதே அவற்றை மீற நமக்கு வழிகாட்டிவிடும். பிறகு செல்வந்தராக உதவும் ஆழ்மனக் கட்டளைகளும், மனப்படங்களும் நம் இலக்கை அடைய உதவும் உத்திகளாக, மாபெரும் சக்திகளாக எப்படிப் பயன்படும் என்று இந்நூல் வழிகாட்டும்.

  • ஆசிரியர்- என்.சொக்கன், பக்கங்கள்: 168.வெளியீடு:கிழக்கு பதிப்பகம்,நியூ ஹரிஜோன் மீடியா பி.லிட்., எண்.33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை,சென்னை-600 018. வேலைக்காக ஏங்குகிறீர்களா? உங்கள் லட்சிய சம்பளம் கிடைக்கத் தாமதம் ஆகிறதா? இன்னும் மேலே, மேலும் உயரே பறக்க ஆசைப்படுகிறீர்களா? இது உங்களுக்கே ! குங்குமத்தில் வெளிவந்த லட்சத்தில் ஒருவன் தொடரின் விரிவாக்கப்பட்ட நூல் வடிவம்.உங்களுக்கான எம்ப்ளாய்மெண்ட் வழிகாட்டி இந்தப் புத்தகம். இண்டர்வியூவுக்குத் தயாராவது எப்படி என்று தொடங்கி ஒரு வேளையில் அமர நீங்கள் என்னென்ன தகுதிகளை வளர்த்துக் கொள்ளவேண்டும், எப்படி என்பது வரை அனைத்தையும் படிப்படியாக விவரிக்கிறது இந்தப் புத்தகம்.

  • ஆசிரியர்- சோம.வள்ளியப்பன், வெளியீடு: கிழக்கு பதிப்பகம்,நியூ ஹரிஜோன் மீடியா பி.லிட்., எண்.33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை,சென்னை-600 018. பக்கங்கள்: 120. கமிட்மெண்ட்.இது போதும். உலகை வளைத்து பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம். ஐந்து நாள் கிரிக்கெட் போட்டி படிப்படியாகச் சுருங்கி 20-20 வரை வந்துவிட்டது. இனி நின்று நிதானமாக யோசித்து யோசித்து ஆடிக் கொண்டு இருக்க முடியாது.ஒவ்வொரு பந்தையும் விளாசவேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமுற்றாகப் பயன்படுத்திக் கொண்டாக வேண்டும். அதற்கு முதலில் தேவை,கமிட்மெண்ட்.எடுத்துக் கொண்ட வேலையை வெற்றிகரமாகச் செய்துமுடிக்கும் வரை ஓயமாட்டேன் என்னும் கர்மசிரத்தை.எந்த சஞ்சலத்துக்கும் இடம் கொடுக்காத மனக் கட்டுப்பாடு. வேறு வழியே இல்லை.ஒரு தவமாக எடுத்துக்கொண்டு செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இலக்கை நிர்ணயித்துக் கொண்டால் மட்டுமே வெற்றி கிடைத்து விடாது.மனத்தை ஒருமுகப்படுத்திக் கொண்டு அதை நோக்கி நாம் பயணம் செய்தாக வேண்டும்.அர்ஜுனனின் கண்களுக்குப் பறவையின் கண் மட்டுமே தெரிந்தது.மரமோ அதன் கிளைகளோ அல்ல.உறுதி மட்டுமே வேண்டும். செய்துமுடிப்பேன் என்னும் மன உறுதி.அந்த உறுதியை நீங்கள் பெறவதற்கு இந்தப் புத்தகம் ஓர் உந்துசக்தி. உங்கள் கனவுகளை விரிவாக்குவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அந்தக் கனவுகளை நிறைவேற்றுவதற்கான சூட்சுமங்களையும் கற்றுக் கொடுக்கிறது இந்நூல்.

  • ஆசிரியர்- சிபி கே.சாலமன், பக்கங்கள்: 136.வெளியீடு: கிழக்கு பதிப்பகம்,நியூ ஹரிஜோன் மீடியா பி.லிட்., எண்.33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை,சென்னை-600 018.தெளிவான ப்ளான். துல்லியமான செயல்முறைகள். வெகு அநாயாசமாக வெற்றியைத் தட்டிப் பறிக்கும் வியக்கத்தக்க ஃபார்முலாக்கள்.உங்களை உங்களுக்கே ஒரு சாதனையாளராக மறு அறிமுகப்படுத்தப் போகும் புத்தகம் இது.இந்தப் புத்தகம் உங்கள் அபாரமான வெற்றிக்கான எளிய, யதார்த்தமான வழிகளை, ஜோடனை இல்லாமல் சொல்லித் தருகிறது. அதுவும் உங்களுக்குள்ளே ஒளிந்திருக்கும் திறமையை எடுத்து தூசுதட்டிக் காட்டியே! சநரதேகசில்லாமல், இந்த புத்தகம் உங்களுடைய மனசாட்சி. அட, ஆமாம்! அட, ஆமாம்! என்று ஒவ்வொரு உதாரணத்தின் போதும் உங்கள் உள்ளம் துள்ளிக் குதிக்கப் போகிறது. ஒவ்வொரு முறை அப்படி நீங்கள் துள்ளும் போதும் ஓரடி உயரப் போகிறீர்கள். எழுதிவைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஜெயித்தே தீரப்போகிறீர்கள்.என்ன பெட்?

  • குமுதம் புத்தகம், பழைய எண்.151 புதிய எண்.306,புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 10. குமுதம் நிருபர் பெ.கணேஷ் குமுதம் இணையதளத்தில் சினிமாவின் எல்லா டெக்னிக்கல் ரகசியங்களையும் இளைஞர்களுக்குப் புரிகிற எளிய தமிழில் சினிமாவிற்குப் பின்னால் என்கிற தொடர்எழுதினார். இதற்கு கிட்டதட்ட அறுநூறு வாழ்த்து ஈ மெயில்கள். அதிலிருந்தே அது எவ்வளவு உதவிகரமான ஒரு தொடர் என்பது நிஜமானது. அந்த தொடரே இப்போது நூல் வடிவில் வெளிவந்துள்ளது. இந்நூலை வாசிக்கிற உங்களில் ஒருவர், நாளைய இயக்குநராக இருப்பீர்கள்.

  • பிருந்தாவனம், 323/10 கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை -40. பக்கங்கள்: 112.