Advertisement

உடலாளுமன்றம்

₹ 100

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடலில் உள்ள உறுப்புகள் எல்லாம், பாராளுமன்றம் நடத்தி காரசார விவாதம் நடத்தினால் எப்படி இருக்கும் என அசை போடும் நுால். மூளையை தலைமைச் செயலராக்கி, உடல் உறுப்புகளை துறை வாரியாக பிரித்து, உடல் செயல்பாட்டை எளிதாக புரிய வைக்கிறது. உடல் உறுப்புகள் பணி புரியும் விதம், நோய் சார்ந்த எச்சரிக்கை மணி அடிக்கிறது.தண்ணீர் அதிகம் குடிப்பதையும், உப்பை குறைவாக சேர்ப்பதையும் உடல் நலன் சார்ந்து விவரிக்கிறது. பல் வலி, வாய் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க, கடைப்பிடிக்க வேண்டியதை கூறுகிறது. சிறுவர்களை மனதில் வைத்து எழுதப்பட்டுள்ளது. பெரும் பகுதி கட்டுரைகள், ‘தினமலர்’ நாளிதழ் பட்டம் இதழில் வெளிவந்தவை.– டி.எஸ்.ராயன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்