Advertisement

வெளிக்குள் வெளிகடந்து


வெளிக்குள் வெளிகடந்து

₹ 125

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

மெய்யறிதலை அடிப்படையாக உடைய தமிழர் தத்துவம் சார்ந்த நுால். இயற்கை இயல்புகளை புரிய அணுக்கோட்பாட்டை முன் வைத்தவை சைவம், வைணவம் என்கிறது. இதன் வாயிலாக இயற்கை இயக்கத்தை அறிந்து கொள்ள முடியும் என சங்க இலக்கியங்களை மேற்கோள் காட்டி விவரிக்கிறது. தமிழர் சமய மெய்யியல் கூறுகளை திரட்டி சைவ சித்தாந்தமாக திருமூலர் கட்டமைத்த முறையை விவரிக்கிறது. தாயுமானவர் காட்டும் சைவ சமய வெளியை விவரிக்கிறது. சிவவாக்கியர் போன்ற சித்தர்கள் காட்டும் நெறிகளையும் கோடிட்டு காட்டுகிறது. பொருட்செறிவும், ஆழமும் உடைய தமிழர் சித்தாந்தத்தை அறிய துணை புரியும் நுால். – புலவர் சு.மதியழகன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்