சுரா புக்ஸ் பிரைவேட் லிமிடெட், 1620ஜே, பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை40. (பக்கம்: 128. விலை: ரூ.40).
எடையூர் சுப்புலட்சுமி சிவமதி நூலெங்கும் வழங்கியுள்ள பல்வேறு துறைகளான சத்துணவு சமையல் சுவையான டிப்ஸ், காய்கறிகள், கீரைகள், பழ வகைகளில் உள்ள சத்துகள், குறிப்பாக பெண்களுக்கான அழகு குறிப்புகள் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை அவரது ஆழ்ந்த புலமை மற்றும் அனுபவத்தை எடுத்துரைக்கின்றன. இந்நூல் வெறும் சமையல் குறிப்புகளாக மட்டும் இராமல் பயனுள்ள சில வீட்டு வைத்திய முறைகளையும் எடுத்து இயம்புவது சிறப்பு. கீரைகளிலும் பருப்பு மற்றும் தானிய வகைகளில் உள்ள சத்துக்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார். டயாபடிஸ் எனப்படும் நீரிழிவு நோய் மற்றும் முதலுதவி குறித்தும் பயனுள்ள குறிப்புகள் உள்ளன. மொத்தத்தில் இந்நூல்
முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை அனைவருக்கும் பயன் தரத்தக்க குறிப்புகள் அடங்கிய நூலாக அமைந்திருக்கிறது.