முகப்பு » இலக்கியம் » தமிழர் காவல் தெய்வங்கள்

தமிழர் காவல் தெய்வங்கள்

விலைரூ.135

ஆசிரியர் : என்.எ.சரவணகுமாரன்

வெளியீடு: அழகு பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
அழகு பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்டு காலனி 2வது தெரு, இராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை-49. (பக்கம்: 264)

கடவுள் நம்மைக் காக்கிறார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். சிவன் கோவில், பெருமாள் கோவில்களில் வாசலில் காவல் தெய்வங்களாக துவார பாலகர் சிலைகள் பெரிதாக நின்று கொண்டு இருக்கும்.
கிராமத்தில் நுழையும் போதே காவல் தெய்வங்கள், இன்றைய சுங்கச்சாவடிகளாக, கிராமச் சாவடிகளில் சிறு தெய்வங்கள் இருக்கும். இப்படி விதவிதமாய் இருப்பதை தேடித் தேடி அலைந்து, 51 காவல் தெய்வங்களை இந்த நூலில், விரிவாகத் தந்துள்ளது பாராட்டுக்குரிய பக்திப் பரிசாகும்.
செம்முனீசுவரர், தம்பிக்கலை ஐயன், தீப்பாய்ந்த அம்மன், பத்திரகாளி அம்மன், பொய் சொல்லா மெய்யர், பொய்யாலம்மன், மாசான முத்தம்மன், மாப்பிள்ளை வீரன், மாயக் குருவி சாமாயி, ஐந்து ஊர் நல்லதங்காள், ஊர் கட்டிய பாட்டையா, இருளப்பன், பாதாள பேச்சி, ஊர்காட்டுச்சுடலை, கொன்றை ஆண்டி ஐயனார், குழுமாயி அம்மன், என்ற விதவிதமான பெயர்களுடன், வரலாறுகளுடன் 51 காவல் தெய்வங்கள் நமது மனதைக் கவர்கின்றன. எல்லா சாதியினரும், எல்லா மதத்தினரும் வணங்கும் காவல் தெய்வம், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ஐயங்கோட்டை கிராம செண்பகமூர்த்தி அய்யனார். திருமணத் தடை நீங்க, குழந்தை உண்டாக, வழக்கு வெற்றி பெற இந்த ஐயனாருக்கு பூஜை செய்யப்படுகிறது.திண்டுக்கல் மாவட்டம் பொருளுர் கிராம நல்ல மங்கை அம்மனுக்கு பூஜை செய்தால், திருடு போனவை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.கடா வெட்டி, பொங்கலிடும் இந்த ஊர்க்காவல் சாமிகளின் கதைகளில் நமது கிராமியப் பண்பாடும், நம்பிக்கையும் உலா வருகின்றன.

Share this:

வாசகர் கருத்து

- ,

SIRU THEIVANGALIN VARALARU MIGAVUM ARUMAI

- ,

SIRU THEIVANGALIN VARALARU MIGAVUM ARUMAI

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us