விலைரூ.75
புத்தகங்கள்
Rating
வடை தெரியும், கேழ்வரகு வாழைத் தண்டு வடை தெரியுமா? புகழேந்தி என்பது ஒருவருடைய பெயர் என்பது வரை மட்டும் தான் தெரியும்; அது ஒரு உணவு என்பது தெரியுமா? உண்மை. கப்பங்கிழங்கில் தயாரிக்கப்படும் உணவு இது. காலி பிளவர் சமைப்பீர்கள்; அதன் இலைகளைத் தூர எறிந்து தானே பழக்கம்? அதையும் சமைத்து சாப்பிடலாமாம். விமலாக்கா யார்? உங்க பக்கத்து வீட்டு சகோதரி தானே? இல்லை என்கிறார் ஆசிரியர். விமலாக்காவில் சால்னா செய்வாராம். நமக்கென்ன தெரியும்... எல்லாம் ஜேக்கப்புக்கே வெளிச்சம்! வித்தியாசமாய் உணவு வகைகளைத் தயார் செய்யும் வித்தியாசமான மனிதரின் புத்தகத்தைப் படித்துப் பார்த்து, சமைத்து ருசிக்கலாம்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய