முகப்பு » ஆன்மிகம் » அம்மன் தரிசனம்

அம்மன் தரிசனம்

விலைரூ.100

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: அம்மன் தரிசனம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை

(பக்கம்:336 ) சுவாமி கமலாத்மானந்தர், ஆதிசங்கரர், அமரசிம்மன் என்ற தலைப்பில் ஒரு சுவையான விவாதத்தை எளிய தமிழில் அழகாக விவரித்துள்ளார். சமண மதத்தைச் சேர்ந்த அமரசிம்மன், எவ்வாறு இந்து சமயத்தை ஏற்று "அமரகோசம் என்ற சமஸ்கிருத இலக்கண நூலை இயற்றினார் என்பதை இந்த கட்டுரை நமக்கு எடுத்துச் சொல்கிறது. பூஜ்யஸ்ரீ சுவாமி ஓங்காரானந்தர், வள்ளுவத்தையும், பகவத் கீதையையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர். அவருடைய பங்களிப்பு மலருக்கு சிறப்பு சேர்க்கிறது. பாரதி காவலர் ராமமூர்த்தி, பருத்தியூர் சந்தானராமன், கே.சுவர்ணா ஆகியோரும் சிறந்த கட்டுரைகளை எழுதியுள்ளனர். சிருங்கேரி மடத்தின் பீடத்தில் இருந்து அருளாசி புரிந்த மகாலட்சுமியின் அருளாசி நிறைந்த கட்டுரைகளும் இந்த மலரில் இடம் பெற்றுள்ளன.என்.தாமோதரன் எழுதியுள்ள பிரச்சனம் - சிறு விளக்கம் - சற்றே வித்தியாசமாக விஷயத்தை உள்ளடக்கியிருக்கிறது. ஜாதகத்தில் காணப்படும் குறை, நிறை பற்றி கவலைப்படுபவர்கள் அவசியம் இந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டும். உலகின் பல நாடுகளிலும் இந்த பிரச்னை மார்க்கம் பற்றி நிலவும் கருத்துக்களையும் கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கிறார். விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரை, இந்த மலரில் காணப்படும் "ஹைலைட் பீஷ்மர் - கிருஷ்ணர் பற்றிய ஓர் ஆய்வு எனச் சொல்லும் வகையில் வித்யாரண்யபுரம் கே.நாராயண சாமியின் கட்டுரை அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் பாதுகாத்து நிதானமாகப் படித்துப் பார்க்க வேண்டிய பல தகவல்களுடன் அமைந்துள்ள மலர் இது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us