எக்ஸைல்

விலைரூ.250

ஆசிரியர் : சாரு நிவேதிதா

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை

  177/103, முதல் தளம், அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை-14. (பக்கம்: 440)

எக்ஸைல் நாவல் ஒரு கதம்ப மாலை. நாவல் எழுதும் கலையில் - பல புதிய தடங்களைக் காட்டி இருக்கிறார் சாரு. சில இடங்களில் கதை சொல்கிறார். சில இடங்களில் கட்டுரை வரைகிறார். சில இடங்களில் டயரிக் குறிப்புகள்.
செக்ஸ் பிரச்னைகள் குறித்து மிகவும் பகிரங்கமாக எழுதி இருக்கும் இவர் துணிச்சலைப் பாராட்ட வேண்டும்!
"ஒருவனுக்கு, 20 வயதில் காதல் வரவில்லை என்றால் - அவனுடைய உடலில் ஏதோ கோளாறு என்று அர்த்தம். ஒருவனுக்கு 40 வயதில் காதல் என்றால் - அவன் மனதில் ஏதோ கோளாறு என்று அர்த்தம் என்று ஒரு புகழ் பெற்ற பேச்சாளர் பேசுகிறார்.
அதைக் கேட்டு ஆயிரம் பேர் கரகோஷம் செய்கின்றனர். இது என்ன மாதிரியான நாடு? 40வயது ஆனால், ஆண் குறியை அறுத்து எறிந்துவிட வேண்டுமா? என்று துணிச்சலுடன் கேட்கிறார் சாரு.
என்னை- புதுமைப்பித்தனின் ஆவியும், ஜி.நாகராஜனின் ஆவியும், நகுலனின் ஆவியும், ஆத்மாநாமின் ஆவியும், ஆதவனின் ஆவியும், தர்மு சிவராமுவின் ஆவியும், கோபி கிருஷ்ணனின் ஆவியும், துரத்திக் கொண்டிருக்கின்றன... என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்.நமது சமூகத்தையும் ஒரு இடத்தில் சாடுகிறார்.
நூலின், 130ம் பக்கத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள, நல்லூர் கிராமத்தில் நடந்ததாக எழுதி இருக்கும் சம்பவங்கள், நம்மை அதிர வைக்கின்றன! அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்று நிறுவுகிறார்.
334ம் பக்கத்தில், "நான் கடவுளை நம்புபவன் தான்; ஆனால், நம்பாதவனாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இல்லாவிட்டால் இந்தியாவில் எழுத்தாளனாக ஜீவிக்க முடியாது! என்று கிண்டலடிக்கிறார்.  சில வரிகள் நம்மை சிலிர்க்க வைக்கின்றன!  நம்மால் புறக்கணிக்க முடியாத ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை நிரூபிக்கிறார்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us