முகப்பு » கட்டுரைகள் » இரா­மனும் இரா­ம­சா­மியும்

இரா­மனும் இரா­ம­சா­மியும்

விலைரூ.150

ஆசிரியர் : ம.பிரகாஷ்

வெளியீடு: காவ்யா பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை

பக்கம்: 192  

ஒரு நாண­யத்­திற்கு இரு பக்­கங்கள் இருப்­பது போன்று, எந்த விவா­தத்­திற்கும் இரண்டு             வித­மான விளக்­கங்கள் உண்டு என்பர். இந்­நூலில், ராமரின் அவ­தாரம் குறித்து, ஈ.வெ.ரா., எடுத்துக் கொண்ட, ராமா­யண எதிர்ப்புப் போர் குறித்து, மிக விரி­வாக ஆய்வு செய்­யப்­             ப­டு­வதை காண்­கிறோம்.இந்­நூலில் மூன்று பிரி­வு­களில் ராமா­யணம் குறித்த ஆய்­வு­களை நூலா­சி­ரியர் செய்­துள்ளார்.
அதில் பெரி­யா­ருக்கு முன் ராமா­ய­ணமும் தமிழ்ச் சமூ­கமும் என்ற பிரிவு, நூலா­சி­ரி­யரின் கடும் உழைப்­பையும், ஆய்வுத் திற­னையும் தெரி­விக்­கின்­றது. இரண்டு மற்றும் மூன்றாம் பிரி­வு­க­ளை­ அ­வ­ரது பேச்­சுக்கள் மூலம்­ வி­ளக்­கு­கிறார். ஈ.வெ.ராவின் பல கொள்­கை­களை ஏற்றுக் கொண்ட தமிழ் மக்கள், ராமா­யணம் குறித்த அவ­ரது வாதங்­களைப் புறக்­க­ணித்து விட்­டனர் என்­பது தான் உண்மை.
இந்நூல் படித்து முடித்­ததும் நமக்கு ஏற்­படும் எண்­ணங்கள் இரண்டு. ஒன்று செத்த பாம்பை மீண்டும் அடிப்­பது வீரமா? இரண்­டா­வது பழங் குப்­பை­களைக் கிள­று­வது ஆய்வா? பகுத்­த­றிவு பண்­பாட்டை வளர்க்க வேண்டும், சிதைக்கக் கூடாது என்­பதை நடு­நி­லை­யா­ளர்கள் நிச்­சயம் ஏற்பர்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us