முகப்பு » ஆன்மிகம் » ராமானுஜா தி சுப்ரீம் சேஜ்

ராமானுஜா தி சுப்ரீம் சேஜ்

விலைரூ.0

ஆசிரியர் : ஜே.கே.சிவம்

வெளியீடு: ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டி

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அனைத்து மக்களையும் சமமாக எண்ணியவர் ஸ்ரீராமானுஜர். ஒப்பற்ற மனிதநேயத்துடன் வாழ்ந்ததால், 1,000 ஆண்டுகள் கடந்தும், அழியாப் புகழோடு நிலைப்பவர். இவ்வுலகின் எல்லாமும், இறைவன் நாராயணனின் கீழ் இயங்குபவையே எனும் கொள்கை நோக்கில், விசிஷ்டாத்வைத கோட்பாடு அடிப்படையில், வைணவத்தைப் பரப்ப பயணித்தவர். அவரது வாழ்க்கையை புரிந்து கொள்ளும் வகையில், ‘RAMANUJA - THE SUPREME SAGE’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நுால்.
ராமானுஜரை ஆச்சாரியராக வணங்கும் குடும்பத்தில் பிறந்த, விராக் என்பவர், நுாலாசிரியரின் கனவில் தோன்றி, ராமானுஜரின் வாழ்க்கையை கதையாகக் கூறுவது போல், எளிமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதுாரில், கேசவ சோமயாஜி – காந்திமதி அம்மையாருக்கு பிறந்தவர் ராமானுஜர். நாராயணனின் வில், வாள், சங்கு, சுதர்சனச் சக்கரம், கதாயுதம் ஆகியவற்றின் அவதாரமாகப் பிறந்தவராகவும் கருதப்படுகிறார்.
அகிம்சையை கடைப்பிடித்தவர். ‘பிறப்பால் அனைவரும் சமம்’ எனும் கொள்கை வகுத்து, ஒடுக்கப்பட்டவர்களை பரிவுடன் அரவணைத்து, வழிபாட்டில் புதிய சடங்குகளை உருவாக்கினார். பாகுபாடு கருதாமல் தகுதியை மட்டுமே மதித்து, ஆன்மாக்களை அணுகினார். திருக்கச்சி நம்பியை குருவாக ஏற்றவர். பெரிதும் மதித்த பெரிய நம்பியின் மனைவியை, குலத்தைச் சொல்லி இழித்துப் பேசிய தன் மனைவியையே பிரிந்தவர். எழுபதுக்கும் மேற்பட்ட வைணவ மையங்களை உருவாக்கி, மிகச் சிறந்த சீடர்களை பொறுப்பாளர்களாக நியமித்த திறன், அவரை சிறந்த நிர்வாகியாகப் பார்க்க வைக்கிறது.
செயல்பட இயலாத இறுதிக்கட்டத்தை, 120ம் வயதில் உணர்த்துவது வியக்க வைக்கிறது. இறுதி உரையில், ‘நிலையில்லா இவ்வாழ்வில், மனிதரிடையே பேதம் செய்யாமல், மனத்தை அலைபாய விடாமல், ஆடம்பர வாழ்வை நாடாமல், எளிமையாக வாழ வேண்டும்’ என, அறிவுறுத்திய ராமானுஜரின் வாழ்க்கை, சமூகத்துக்கு ஒரு பாடம். அறக்கடலாக விளங்கியவரின் வாழ்க்கையை கூறும் முறைமை வரவேற்கத்தக்கது. ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு, எளிய கதைகள் மூலம் சொல்லப்பட்டுள்ளது.   
மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us