முகப்பு » ஆன்மிகம் » திருவடி முதல் திருமுடி வரை

திருவடி முதல் திருமுடி வரை

விலைரூ.160

ஆசிரியர் : அருண் சரண்யா

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
புத்தகத்தின் பெயரைப் பார்த்ததும் திருமாலும், பிரம்மனும் விஸ்வரூபம் எடுத்த சிவபெருமானின் அடியையும் முடியையும் காணச்சென்ற கதை தானே என்று நினைக்க வேண்டும். திருவடி முதல் திருமுடி வரையான உடலின் ஒவ்வொரு உறுப்புகளைப் பற்றிய அரியின், சிவனின் திருவிளையாடல்கள் விளக்கப்படுகின்றன. சிறு சிறு கதைகளின் வழியே எளிமையாக மனதில் பதியும் வகையில் சொல்லப்பட்டுள்ள வித்தியாசமான நுால் இது.
 தன் இடையால் சிவபக்தனை திருத்திய திருமாலின் கதை சுவாரசியத்தைத் துாண்டும். ராதையின் அன்பை உணர்த்துவதற்காக வயிற்றுவலி நாடகமாடிய பெருமாள், பாவாஜி என்ற பக்தருடன் தாயக்கட்டை ஆடிய அழகு, வாயால் அதிசயம் செய்த கண்ணன், வாயால் கெட்ட கைகேயி, மாயூரத்தில் முனிவரின் கை நீளாத அதிசயம், பிட்டு விற்று பிழைப்பு நடத்தும் கிழவிக்காக மண் சுமக்க வந்த ஈசனின் கருணை, முதுகில் பிரம்படி பட்ட பேரன்பு, திருவாலங்காட்டில் நடனமாடும் போது காலால் காது குண்டலத்தை நக்கி எடுத்த சிவபெருமானின் லீலையை, திருமயிலையில் தறி நெய்தவாறு மனக்கண்ணால் கண்ட திருவள்ளுவர். 
தருமிக்கு ஆயிரம் பொற்காசுகள் தேவை தான். ஆனால், எதற்காக அந்த தேவை என்பதை விளக்குமிடம் அருமை. இதையெல்லாம் படித்தால் மட்டுமே அனுபவிக்க முடியும்.
எம்.எம்.ஜெ.,  

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

iPaper
சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us