முகப்பு » கட்டுரைகள் » வெற்றி ஒலி

வெற்றி ஒலி

விலைரூ.150

ஆசிரியர் : டாக்டர் பாலசாண்டில்யன்

வெளியீடு: விஷன் அன்லிமிடெட்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சாதாரண வாழ்க்கை சம்பவங்களை முன்  வைத்து, சிந்தனையை துாண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். வாழ்வில் முன்னேற்றத்தை துாண்டும் வகையில் அமைந்து உள்ளன. செயலுக்கு பின் உள்ள சிந்தனைகள் மிக இயல்பாக கோடிட்டு காட்டப்பட்டுள்ளன. அன்றாடம் நிகழ்வதை நுட்பமாக கவனித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிந்தனையில் ஏற்படும் சிறு மாறுதல், செயலில் எவ்வளவு பெரிய மாறுதலை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக்குகிறது. வெற்றியின் வாசலை திறக்கும் வகையில் அமைந்துள்ளது. வாழ்வில் உயர்ந்தோரின் பொன்மொழிகளும் எடுத்துக்காட்டுகளாக இணைக்கப்பட்டுள்ளன.
‘முயற்சி எல்லா வேளைகளும் இன்பம் பயப்பதில்லை. ஆனால், முயற்சி இன்றி இன்பம் ஒருபோதும் பிறப்பதில்லை’ போன்ற கட்டுரைகளில் ஆங்காங்கே, மனதில் பதியும் வகையில் பொன்மொழிகள் உள்ளன. வெற்றிப் பாதையில் செல்ல முயற்சிப்போருக்கு வழிகாட்டும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us