முகப்பு » அரசியல் » வங்கத்தின் சிங்கப் பெண்மணி மம்தா பேனர்ஜி

வங்கத்தின் சிங்கப் பெண்மணி மம்தா பேனர்ஜி

விலைரூ.150

ஆசிரியர் : ஜெகதா

வெளியீடு: நேஷனல் பப்ளிஷர்ஸ்

பகுதி: அரசியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தலைமைப்பண்பு கொண்டவர், பருத்திப் புடவை, சாதாரண ஹவாய் செருப்பு என,  எளிமையாக வாழும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பற்றி எழுதப்பட்டுள்ள நுால்.

அரசியல் எளிமை மம்தாவின் மந்திர ஆளுமையாக வசீகரிக்கப்படுகிறது. மன வலிமையும், சலிக்காத போர்க்குணமும் மிக்க அரசியல் பயணம், அவரது சாதனைகளுக்கான ஆதாரமாக விளங்குகிறது. மேற்கு வங்கத்தை, திரிணமுல் காங்கிரசின் கோட்டையாக மாற்றிச் சாதனை படைத்துள்ளார். இன்று, தேசிய அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் மாநிலமாக, மேற்கு வங்கத்தை மாற்றியுள்ளார்.

தோல்விகளுக்கு அஞ்சாது, இரட்டை வலிமையுடனும் உற்சாகத்துடனும் தனது இலக்கை நோக்கிப் பயணித்து, பல்வேறு வெற்றிகளைத் தன்வயமாக்கியவர். மம்தாவைப் பற்றிய பல அரிய தகவல்களை கொண்டுள்ளது.

மம்தா ஒரு சிறந்த ஓவியர். அவரது ஓவியங்கள் பல கோடிக்கு மேல் ஏலம் போகின்றன. மேலும், 16 நுால்களுக்கும் மேல் எழுதியுள்ளார். தனிப்பெண்ணாக இந்தச் சமூகத்தில் வளர்ச்சி, வெற்றியுடன் விஸ்வரூபம் எடுக்க நினைப்பவர்களுக்கு, சிறந்த வழிகாட்டி நுால்.
முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us