முகப்பு » சுய முன்னேற்றம் » கோடிகளைக் கொட்டும் சக்சஸ் ரகசியங்கள்!

கோடிகளைக் கொட்டும் சக்சஸ் ரகசியங்கள்!

விலைரூ.150

ஆசிரியர் : ராம்குமார் சிங்காரம்

வெளியீடு: ஒய்.ஏ.பதிப்பகம்

பகுதி: சுய முன்னேற்றம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
நேர்மையாக உழைக்கத் தேவையான யுக்திகளை கற்பிக்கும் நுால். பணம் சம்பாதிக்கத் தேவையான அடிப்படை குணாதிசயங்கள், சிகரத்தை எட்டிப் பிடிக்க தேவைப்படும் ரகசியங்களை பட்டியலிடுகிறது.

பிறர் பணியை ஏன் பாராட்ட வேண்டும்; விற்பனையில் எந்த மாதிரியான யுக்தியை கையாளுவது; விளம்பரம் செய்வதில் கவனிக்க வேண்டியவை; போட்டி எந்த இடத்திற்கு பொருந்தும்; தலைமை தகுதி எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்கிறது.

தயக்கத்தை ஏன் தவிர்க்க வேண்டும்; பிரச்னைகளுக்கு காரணம் என்ன; பிரச்னைகளை எந்நேரமும் சுமக்க வேண்டுமா; நிதானமாகச் செயல்பட வேண்டிய அவசியம் ஏன்; தோல்வியை தோற்கடிப்பது எப்படி; உரையாடல் வழியாக எப்படி வெற்றி பெறுவது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கிறது.

வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்கள், எட்டிய சிகரத்தை தொட நினைப்பவர்கள் வாசிக்க வேண்டிய தன்னம்பிக்கை நுால்.
– டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us