முகப்பு » கதைகள் » அன்பே சக்தி

அன்பே சக்தி

விலைரூ.320

ஆசிரியர் : வரலொட்டி ரெங்கசாமி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கதையானாலும், கட்டுரையானாலும், ஆன்மிகத்தையும், லோகாயுதத்தையும் கலந்து எழுதுவதில் வல்லவரான வரலொட்டி ரெங்கசாமியின் மற்றொரு படைப்பு அன்பே சக்தி என்ற நாவல். விண்ணுலகில் துவங்கி, மண்ணுலக நிகழ்வுகளையும் இணைத்து, அந்த இறைவியையே மண்ணுலகிற்கு கொண்டு வந்திருக்கிறார்.

வெறும் கற்பனையாக மட்டுமல்லாமல், நிகழ்காலத்தில் நடமாடும் ஒருவரை கதையில் முக்கிய பாத்திரமாக சித்தரித்து, அவர் மக்களுக்கு செய்து வரும் சேவையை அறியச் செய்திருக்கிறார். இடையிடையே தெய்வங்களை உரையாட வைத்திருப்பது புதுமை.
சோதனைக் காலங்களில் கடவுள் எப்படி மனித உருவில் வந்து கைகொடுப்பார் என்பதை பல இடங்களில் விளக்கி இருக்கிறார். நாவலில் பல கற்பனைக் கதைகளையும், சில உண்மைக் கதைகளையும் அள்ளித் தெளித்திருப்பது படைப்பாற்றலுக்கு எடுத்துக்காட்டு. இதை நாவலாகவும் படிக்கலாம். உண்மைச் சம்பவங்கள் நிறைந்த ஒரு ஆன்மிக நுாலாகவும் அனுபவிக்கலாம்.    
 – இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us