முகப்பு » கம்ப்யூட்டர் » எல்லாம் இணைய மயம்

எல்லாம் இணைய மயம்

விலைரூ.150

ஆசிரியர் : பா.சிதம்பரராஜன்

வெளியீடு: தமிழ் அலை ஊடக உலகம்

பகுதி: கம்ப்யூட்டர்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இன்டர்நெட் என்ற இணைய செயல்பாட்டின் முக்கியத்துவம், தொழில் நுட்ப வளர்ச்சியை விளக்கும் நுால். அன்றாட பயன்பாடு பற்றி விபரங்களை தருகிறது. பொருட்களின் இணையம் என்பது துவங்கி, 16 தலைப்புகளில் இணைய தொழில் நுட்பத்தின் முக்கியத்துவம் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. இந்த பொருண்மை பற்றிய தெளிவான விளக்கம் தரப்பட்டுள்ளது. அடுத்து, அதை எளிதாக பயன்படுத்துவதில் உள்ள முறைமைகள் கூறப்பட்டுள்ளன. நவீன தொழில் நுட்ப போக்கை தெளிவு படுத்தும் விதமாக தகவல்கள் அமைந்துள்ளன.

வாழ்வில் அன்றாட அத்தியாவசிய பணிகளை நிறைவேற்றிக் கொள்வதில் இணையத்தின் சுலப செயல்பாட்டை புரிந்து கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளது. இணைய துறை சார்ந்து, தொழில் நுட்பத்தின் பயன்களை புரிந்து கொள்ள உதவுகிறது. வேளாண்மையில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த விபரமும் தனியாக தரப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்பம் சார்ந்த தமிழ் சொற்களை புத்தகம் முழுதும் காண முடிகிறது.
இன்றைய காலக்கட்டத்தின் தேவையை பூர்த்தி செய்கிறது. தமிழில் தொழில் நுட்ப அறிவை வழங்கும் முக்கிய நுால்.
மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us