முகப்பு » அரசியல் » பஞ்சாயத்துச் சட்டங்களும் வட்டார ஊராட்சித் தலைவர்களுக்கான

பஞ்சாயத்துச் சட்டங்களும் வட்டார ஊராட்சித் தலைவர்களுக்கான நிர்வாக நடைமுறை விளக்கக் குறிப்புகளும்

விலைரூ.80

ஆசிரியர் : சோ.சேசாசலம்.

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: அரசியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அரசியல் சாசன திருத்தச் சட்டத்தின்படி, தமிழக அரசு ஊராட்சிகள் சட்டத்தை இயற்றியது பற்றிய நுால். அதன் அடிப்படையில் ஊராட்சி அமைப்புகள் செயல்படுவது பற்றி கூறுகிறது.  ஆதிதிராவிடர், பழங்குடியினர், பெண்களுக்கு சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு, மக்களின் பொருளாதார சமூக மேம்பாட்டிற்காக கிராம, வட்டார ஊராட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு, கடமை, கூட்டங்கள் நடத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், விதிக்கப்படும் வரிகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

வரவு – செலவு திட்டம், வறுமை ஒழிப்பு திட்டம், சுய வேலைவாய்ப்பு திட்டம், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம், வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நிலம், நீர் பாதுகாப்பு, சிறு பாசன வேலைகள், இணைப்பு சாலைக்கு நிதியை பிரித்தளித்தல் போன்றவையும் விளக்கப்பட்டுள்ளன. தேர்தல் வழக்குகள் போன்றவை பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறது. கிராம, மாவட்ட ஊராட்சி பிரதிநிதிகள் கடமை ஆற்ற வழிகாட்டும் நுால்.

புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us