முகப்பு » தீபாவளி மலர் » அமுதசுரபி தீபாவளி சிறப்பிதழ்

அமுதசுரபி தீபாவளி சிறப்பிதழ்

விலைரூ.175

ஆசிரியர் : திருப்பூர் கிருஷ்ணன்

வெளியீடு: ஸ்ரீராம் டிரஸ்ட்

பகுதி: தீபாவளி மலர்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மகான்களின் அருளுரை, ஆன்மிக கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் அபூர்வ தகவல்களுடன் ஜொலிக்கிறது அமுதசுரபி தீபாவளி சிறப்பிதழ். பிரபல எழுத்தாளர்கள், அறிஞர்களின் ஆக்கங்கள் நிறைந்துள்ளன. தமிழில் சிறந்த கவிஞர்களின் ஆக்கங்களும் உள்ளன.

பிரபல நகைச்சுவை நடிகர் மறைந்த நாகேஷ் பற்றிய விரிவான கட்டுரை சிறப்பிடம் பெற்று உள்ளது. அவரது வாழ்வின் நிலை மற்றும் நகைச்சுவை சிறப்புகளை விவரிக்கிறது. ஓர் ஓவியக் கலைஞனின் தசாவதாரம் என்ற தலைப்பில், பிரபல ஓவியர் லியனார்டோ டாவின்சி குறித்த விபரக் குறிப்பு தெளிவாக எழுதப்பட்டுள்உள்ளது. நடிகர் திலகம் சிவாஜி, தனக்கு பிடித்த கதாபாத்திரம் குறித்து வெளியிட்ட கருத்துகளை தொகுத்து ஒரு கட்டுரை வரையப்பட்டுள்ளது.

மிகவும் சுவாரசியம் தருகிறது. கர்நாடக இசைப் பாடகர் டாக்டர் ஆர்.கணேஷ் எழுதிய, எது ஆன்மிகம் என்ற தலைப்பிலான கட்டுரை, ஆன்மிக விளக்கமாக உள்ளது. சிறந்த அறிவுரைக் களஞ்சியமாகவும் அமைந்துள்ளது. இனிமை, புதுமை, முதுமையில் நன்மை என பலதரப்பட்ட பொருண்மைகளுடன் மலர்ந்து மணம் வீசுகிறது அமுதசுரபி தீபாவளி சிறப்பிதழ்.

– போதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us