முகப்பு » அறிவியல் » முதியோர் நலம்

முதியோர் நலம்

விலைரூ.250

ஆசிரியர் : டாக்டர் வி.எஸ்.நடராஜன்

வெளியீடு: வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை

பகுதி: அறிவியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
முதுமை பருவத்திலும் நலமாக உற்சாகமாக வாழ கடைப்பிடிக்க வேண்டிய பரிந்துரைகளை கொண்ட அற்புத மருத்துவ வழிகாட்டி நுால். முதுமை பற்றி அறிவியல் பூர்வமாக விளக்கம் தந்து, கடந்து செல்வதை தெளிவாக தந்துள்ளது.

முதுமை ஏற்பட காரணங்களை உடலியல் ரீதியாக எளிமையாக விளக்குகிறது. முதுமையால் வரும் நோய்கள் குறித்து விளக்கி, அவற்றில் இருந்து விலகி வாழும் வழிமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. நோய்களை அண்டவிடாமல் தடுப்பது பற்றிய அறிவுரையும் உள்ளது.

மலச்சிக்கல் போன்ற உபாதைகளில் இருந்து மருந்தின்றி விடுபடும் வழிமுறைகளை அறிமுகம் செய்கிறது. முதுமை பிரச்னையை, 37 இயல்களில் தெளிவாக்கி, மகிழ்ச்சியுடன் வாழ மருத்துவ ஆலோசனைகளை தருகிறது. இறப்பை ஏற்க வேண்டிய விதம், உடல் தானம் செய்வது பற்றி எல்லாம் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. முதுமை பருவத்தை மகிழ்ச்சியுடன் கடக்க வழிகாட்டும் அறிவு நுால்.

அமுதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us