முகப்பு » பெண்கள் » சாதனை திலகங்கள்

சாதனை திலகங்கள்

விலைரூ.230

ஆசிரியர் : லதானந்த்

வெளியீடு: சத்யா எண்டர்பிரைசஸ்

பகுதி: பெண்கள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பழமை வாதத்தையும் சிந்தனையையும் முறியடித்து, அரிய சாதனைகள் புரிந்துள்ள பெண்களின் முயற்சியை தெளிவாக எடுத்து கூறும் நுால். இந்தியாவின் பல பகுதிகளிலும் பல துறைகளில் மிளிர்பவர்கள் பற்றிய விபரங்கள் தெகுக்கப்பட்டுள்ளன. வார இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நுாலாகியுள்ளது.

நிலம், நீர், ஆகாயம் என வெளிகளில் கல்வியால், தொழில் நுட்ப வளர்ச்சியால் சாதனை புரிந்துள்ள பெண்களை கவனப்படுத்தும் விதமாக உள்ளது. முன்னேறத் துடிக்கும் இளம் பெண்களுக்கு முன்மாதிரிகளை எடுத்துரைக்கிறது.

பல துறைகளிலும் சாதனை பெண்கள் எட்டியிருக்கும் உயரம், எட்டுவதற்கு அவர்கள் செய்த முயற்சி, தடைகளை கடந்து முன்னேறிய விதம் பற்றி மிக எளிய நடையில் அமைந்துள்ளது. சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு உகந்த கைவிளக்கு இந்த புத்தகம்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us