முகப்பு » இசை » நம்பிக்கை விண்மீன்

நம்பிக்கை விண்மீன்

விலைரூ.100

ஆசிரியர் : பாவலர் பூர்ணிமா சங்கர்

வெளியீடு: சோலைப் பதிப்பகம்

பகுதி: இசை

ISBN எண்:

Rating

பிடித்தவை
யாப்பிலக்கண புரிதலோடு வெண்பாவின் வகைகள், ஆசிரியப்பா, கட்டளை கலித்துறை, அம்மானை போன்ற பா வகைகளில் அமைந்த பாடல்களின் தொகுப்பு நுால். ‘சிந்தையிலே புது எண்ணம் இருந்தாலே போதும் சிறகுகளும் முளைத்திடுமே புது வானின் ஓரம்’ என்றும், ‘ஊக்குவிக்க ஆளிருந்தால் உச்சமும் எட்டிடலாம்’ போன்ற தன்னம்பிக்கையூட்டும் வரிகளும் நிறைந்துள்ளன.

‘இரவா நிலையே இனிமை’ என வறுமையிலும் செம்மையுறு வாழ்க்கையை விளக்கும் பாடல்கள் உள்ளன. பெண்மையைப் போற்றியும், தமிழர் நலம் போற்றும் பாடல்களும், சுற்றுச்சூழலின் துாய்மையை வலியுறுத்தும் பாடல்களும் இடம் பெற்றுள்ளன.
கல்வி, நட்பு, உறவு, பண்புடைமை, சான்றாண்மை, ஒப்புரவு, ஈகை போன்ற வாழ்வை செம்மையாக்கும் மரபுக் கவிதைகளின் நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us