முகப்பு » இசை » ஸகல தேவதாப்ரிய 72 மேக ராக க்ருதிகள்

ஸகல தேவதாப்ரிய 72 மேக ராக க்ருதிகள்

விலைரூ.500

ஆசிரியர் : கலைமாமணி டாக்டர் ருக்மிணி ரமணி

வெளியீடு: ஆசிரியர் வெளியீடு

பகுதி: இசை

ISBN எண்:

Rating

பிடித்தவை
எளிமையாக, 72 மேளகர்த்தா ராகங்களில் பாட ஏற்ற வகையில் கீர்த்தனைகளை உருவாக்கி தந்துள்ள நுால். இசை உலகுக்கு கிடைத்த பொக்கிஷமாக மலர்ந்துள்ளது.

பக்தியுடன் அனைத்து தெய்வங்கள் மீதும் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. கிருஷ்ணர் மீது அதிக பிரியத்துடன் பாடப்பெற்றுள்ளன. இசை கற்போர் எளிமையாக பாட ஏற்ற விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கீர்த்தனையும், சந்தம் சிறக்க முத்து முத்தாக அமைந்துள்ளன.

ஸ்வர குறிப்புகள் மிக எளிமையாக தரப்பட்டுள்ளன. பிரபல இசைக்கலைஞர் பாபநாசம் சிவன் பாடல்கள், கேட்போரை பேரானந்தம் அடையச் செய்யும். அதே பாணியில் அவரது மகள் இயற்றியுள்ள இந்த பாடல்களும் பொருட்செறிவு, இசை இலக்கண கட்டுப்பாடுகளுடன் அமைந்து உள்ளன. செவ்வியல் இசைக்கு சிறப்பு சேர்க்கும் நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us