ஆசிரியர்-எழில் கிருஷ்ணன்.வெளியீடு:புரோடிஜி புக்ஸ் பதிப்பகம், நியூ ஹோரிசான் மீடியா பி.லிட்.,எண்.33/15, எல்டம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. பக்கங்கள்:80.உலக ஆகாதார நிறுவனம்(WHO)மாணவர்களுக்கென வகுத்துத் தந்திருக்கும் பத்து அடிப்படை வாழ்வியல் பயிற்சிகளில் இது ஒன்று.யோசிப்பதற்கே நேரம் இல்லை என்று காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடுகிற காலம் தான்.ஆனால்,கேள்வி கேட்கவும், பிரச்னைகள் வரும் போது அதைத் தீர்க்கவும்,ஆராயவும்,ஆழ்ந்து யோசிப்பது அவசியமாக இருக்கிறது.ஆழ்ந்து சிந்திக்கும் திறனை வளர்க்கக் கற்றுத் தருகிறது இந்நூல்.