குமரன் பதிப்பகம், 3, முத்து கிருஷ்ணன் தெரு, தி.நகர், சென்னை17. (பாகம்1. பக்கம்: 230. விலை: ரூ.120. பாகம்2. பக்கம்: 204. விலை: ரூ.120).
சிலப்பதிகாரத்தைப் புதுக்கவிதையாகத் தந்திருக்கிறார் பா.விஜய். வரிக்கு வரி தித்திப்பு! படிக்கப் படிக்கப் புல்லரிப்பு!
மாதவியைப் பற்றிக் கூறுகையில்
"குழந்தையைக் கூட
குனிந்து தூக்காத
வீர புருஷர்களையும்
ஒரு புருவ அசைவில்
புடவைக்குக் கொசுவம்
மடிக்க வைப்பாளாம்...
என்கிறார் கவி.
இலக்கிய ரசிகர்களுக்கு ஓர் அறுசுவை விருந்து!