முகப்பு » ஆன்மிகம் » வரம் அருளும் பரதோஷம் வழிபாட்டு முறைகள்

வரம் அருளும் பரதோஷம் வழிபாட்டு முறைகள்

விலைரூ.35

ஆசிரியர் : கிருஷ்ணன்

வெளியீடு: நற்பவி பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
நற்பவி பரசுரம், 57ப, பசுல்லா சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்:112).

உலகைப் பேரழிவில் இருந்து காத்து ரட்சிக்கும் பொருட்டு பரமேஸ்வரன் ஆலகால விஷத்தை உட்கொள்ள முயலும்போது, உமையவள் தடுத்து நிறுத்த, அவ்விஷம் கழுத்திலேயே கருமணியெனத் தங்கிட, ்நீலகண்டர்ீ எனப் போற்றித் துதிப்பதற்குரி யவரானார். அத்தருணத்தில் சிவகணத்தவர்களின் ஒப்பற்ற தலைவனும், காவல் தெய்வமுமான நந்திதேவரி ன் கொம்புகளின் நடுவே நடராசர் ஆனந்தத் தாண்டவம் புரி ந்திட, வேத கோஷங்களும், மங்கள வாத்தியங்களும் முழங்கின. கிடைத்தற்கரி ய இப்பேற்றினை கண்டோர் அனைவரும் பேரி ன்பத்தில் மூ ழ்கித் திளைத்தனர். இந்த சுபமுகூர்த்த வேளை பரதோஷ காலம் எனப்படும். எல்லாவற்றையும் ஆட்டிப் படைப்பவன் தானும் ஆட, உலகும் ஆடி, அடங்கி, ஒடுங்கி விடுகிறது. சிவனாரை வழிபடுவதற்கும், தியானம் செய்வதற்கும் பொன்னான நேரம் இதுவன்றோ? எனவே தான், பரதோஷக்கால வழிபாட்டின்போது சிவத்திருத்தலங்களில் எல்லாம் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. பல்வேறு நூல்களில் இருந்து அரி ய பல தகவல்களை எடுத்தாண்டுள்ள ஆசிரி யர், பரதோஷ விரதம் பற்றிய புராணக்கதை ஒன்றையும் சுவைபடக் கூறியுள்ளார். மேலும் பூஜா விதானங்கள், நாடெங்கிலும் உள்ள பரசித்திப் பெற்ற சிவத் திருத்தலங்கள், திருநீற்று (விபூதி) மகிமை குறித்த விவரங்களும் இந்நூலில் இடம் பெறுகின்றன.

சிவநேசச் செல்வர்களுக்கும், ஆன்மிக வாசக அன்பர்களுக்கும் இந்நூல் சிவப்பிரசாதம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us