அவ்வுலகம்

விலைரூ.

ஆசிரியர் : வெ.இறையன்பு

வெளியீடு: உயிர்மை பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை

  11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை - 18.
 
அரசுப்பணியிலும், இலக்கிய வட்டத்திலும் குறிப்பிடத்தக்க பெயர் பெற்றுள்ள நூல் ஆசிரியர், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி  இறையன்பு எழுதிய மூன்றாவது நாவல் இது. நூலின் தலைப்பை பார்த்து, மறு ஜென்மம், அடுத்த பிறப்பு என்பது போன்ற புதிரான விஷயங்களை உள்ளடக்கிய மர்ம நாவலாக இருக்கும் என எதிர்பார்த்து பிரித்தால், நூலின் துவக்கத்திலேயே நூல் ஆசிரியர், "அவ்வுலகம் என்பது அவ்வுலகமல்ல என்று முன்னுரை கொடுத்து விடுகிறார்.
ஒரு முதியவரின் மரணம் குறித்து, அண்ணனும், தம்பியுமாக இரு சிறுவர்கள் பேச்சிலிருந்து முதல் அத்தியாயம் துவங்குகிறது.
 சிறுவர்களின் உரையாடலில், உலுக்கிப் போட வைக்கும், விளங்க முடியாத அர்த்தங்களை வைத்து நாவலைத் துவங்கியுள்ளார் நூலாசிரியர். நாவலில் அடுத்தடுத்த பாத்திரங்கள் அறிமுகமாகி, பேசிக் கொண்டே போக, அதன் வழியாக நூல் ஆசிரியரின் வார்த்தை விளையாட்டு, நாவலுக்கு சுவையைக் கூட்டிக் கொண்டே போகிறது. முழு நாவலையும் படித்து முடிக்கும்போது, வாழ்வில் நாம் தொலைத்த விஷயங்கள், செய்த தவறுகள், சொந்த அனுபவங்கள் என அனைத்தும் ஒப்பீடு செய்ய வரிசை கட்டி நிற்பதே, "அவ்வுலகம் தரும் வியப்பான அனுபவம்.

 

 

 

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

OR

Login with

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website. All rights reserved.  | Contact us